முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் பொதுமக்கள் கடும் அச்சம்: மத்திய அரசு தீர்வு காண கனிமொழி எம்.பி. கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2026      தமிழகம்
Kanimozhi

சென்னை, வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் தமிழகத்தில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் என்றும், இந்த பிரச்சனையில் மத்திய அரசு தீர்வு காண கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால், வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஒரு சிலிண்டர் வைத்துள்ள குடும்பங்கள், முன்பதிவு செய்வதற்கான கால இடை வெளி 21 நாட்கள் என்று சமீபத்தில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதை 25 நாட்கள் என்று மத்திய அரசு தற்போது உயர்த்தி உள்ளது. 

இந்தநிலையில், தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தி.மு.க. எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்களில் வணிக ரீதியான எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பரவலான கவலையை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் போன்ற எரிபொருள்களின் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற அறிக்கைகள் இந்த கவலைகளை மேலும் அச்சப்படுத்தி உள்ளன. 

கோவிட்-19 தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது இதேபோன்ற ஒரு போக்கு காணப்பட்டது, அப்போது மத்திய பா.ஜ.க. அரசின் தாமதமான மற்றும் போதுமான நடவடிக்கை இல்லாததால் சாதாரண மக்கள் நெருக்கடியின் சுமையைத் தாங்க வேண்டியிருந்தது. சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரைவாகச் செயல்பட வேண்டும் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பரந்த பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடிய இடையூறுகளைத் தடுக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என் அதில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து