முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பலூடா

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

பலூடா செய்யத் தேவையான பொருள்கள்;

  1. ஐஸ்கிரீம் - 100 மில்லி.
  2. பால் - 400 மில்லி.
  3. பாதாம் - 5.
  4. முந்திரி -3.
  5. நெல்லிக்காய் -3 துண்டுகள்
  6. சேமியா - 25 கிராம்.
  7. ஜீனி - 50 கிராம்.
  8. சப்ஜா ஸிட் - 1 ஸ்பூன்.
  9. ரோஸ் எசன்ஸ் - 1/2 ஸ்பூன்.
Method: 

 

செய்முறை ;-

  1. ஒரு பாத்திரத்தில் 1/4 லிட்டர் தண்ணீர் ஊற்றி 1 ஸ்பூன் சப்ஜா ஸிட் போட்டு 15 நிமிடம்  ஊற வைக்க வேண்டும்.
  2. அடுப்பில் வானொலியை  வைத்து ஒரு டம்ளர் பாலை ஊற்றி  நன்றாக கொதிக்க வைத்து அதில் 25 கிராம் சேமியா மற்றும் 50 கிராம் ஜீனி  போட்டு நன்கு வேக  வைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் பாதாம் 5, முந்திரி 3,நெல்லிக்காய் 3 துண்டுகள் போட்டு 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  4. ஊற வைத்துள்ள பாதாம் 5, முந்திரி 3,நெல்லிக்காய் 3 துண்டுகளை மிஸ்சி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  5. ஒரு டம்ளர் பாலை  நன்றாக கொதிக்க வைத்து ஆரிய பின்னர்  2 மணி நேரம் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
  6. ஒரு கிளாசை எடுத்துக்கொண்டு அதில் ஊற வைத்துள்ள சப்ஜா ஸிட் 2 ஸ்பூன் போடவும்.
  7. ரோஸ் எசன்ஸ் 1/2 ஸ்பூன் ஊற்றவும்.
  8. தயார் செய்துள்ள பால் சேமியா 1 1/2 ஸ்பூன் போடவும்.
  9. மிஸ்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள பாதாம்,முந்திரி நெல்லிக்காய் விழுதை ஊற்றவும்.
  10. இதனுடன் குளிர வைத்துள்ள ஒரு டம்ளர் பாலை ஊற்றி லேசாக கலந்து விடவும்.
  11. 2 ஸ்பூன் ஐஸ்கிரீம் போடவும்.
  12. 2 சொட்டு ரோஸ் எசன்ஸ் ஊற்றவும்.
  13. சுவையான பலூடா ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!