முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கருணைக்கிழங்கின் மருத்துவ பலன்கள்

  1. கருணை கிழங்கு மருத்துவ குணங்கள் அதிகம் உள்ள கிழங்கு வகையை சார்ந்ததாகும்.
  2. கருணை கிழங்கு மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது,மலச்சிக்கல் தீர்வதால் உள்மூலம் மற்றும் வெளிமூலம்  குறைகிறது.
  3. கருணை கிழங்கு இரத்த அடைப்பை  நீக்குகிறது.
  4. கால்சியம் சத்துக்கள் கருணை கிழங்கில் அதிகமாக உள்ளதால் எலும்புகள் பலமடைகிறது,குறிப்பாக முதுகு மற்றும் கால் எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகள் குறைகிறது.
  5. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்னைகள் மற்றும் மாதவிடாய் பிரச்னைகளை கருணை கிழங்கு சரிசெய்கிறது.
  6. உடலில் உள்ள நரம்புகள் பலமடைய கருணை கிழங்கை சாப்பிடலாம்.
  7. தேவையற்ற கெட்ட கொழுப்புக்கள் மற்றும் உடலில் உள்ள கெட்ட நீரை  கருணை கிழங்கு வெளியேறுகிறது.
  8. கருணை கிழங்கை வாரம் 2 முறை சாப்பிட்டு வர மலக்குடல் சுத்தமாகும்
  9. உடலுக்கு சக்தி கிடைத்து சுறுசுறுப்பாக செயல் பட கருணை கிழங்கு உதவுகிறது.
  10. பித்தப்பையில் கழிவுகள் சேர்ந்தால் பிரஷர்,தலை சுற்றல்,வாந்தி மயக்கம் போன்ற நோய்கள் வரும்,கருணை கிழங்கை உணவில் அதிகமாக சேர்த்தால் இந்த நோய்கள் தீரும், மேலும் கருணை கிழங்கை பொறித்து சாப்பிடுவதை விட அவித்து சாப்பிட்டால் பிரஷர்,தலை சுற்றல் போன்ற நோய்கள் விரைவில் தீரும்.
  11. கருணைக்கிழங்குடன் இஞ்சி,கறிவேப்பிலை மற்றும் வெந்தயம் சேர்த்து  சாப்பிட்டால் உடல் வலுப்பெறும்.
  12. கருணை கிழங்கை சாப்பிடுவதால் இதய நரம்புகளில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் நீங்குவதால் மாரடைப்பு வருவது தடுக்கப்படுகிறது. இதயம் பலம் பெற கருணை கிழங்கை சாப்பிடலாம்.
  13. கருணை கிழங்கை சாப்பிடுவதால் உடலில் உள்ள கழிவுகள் நீங்குவதால் தேவையற்ற நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்