முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பீட்ரூட் சாறின் மருத்துவப் பயன்கள்

பீட்ரூட் சாறின் மருத்துவப் பயன்கள்  

  1. பீட்ரூட் சாறில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.
  2. பீட்ரூட் சாறு மலச்சிக்கலை போக்க வல்லது.
  3. ஒரு டம்ளரில் பீட்ரூட் சாறு இரண்டு  பங்கு,நெல்லிக்காய் சாறு ஒரு பங்கு மற்றும் தேன் ஒரு ஸ்பூன் ஊற்றி தயிர் கடைவது போல் நன்றாக கடைந்து சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
  4. இந்த சாறு இரத்த சோகை மற்றும் உடல் சோர்வை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
  5. பீட்ரூட் சாறு செரிமான கோளாறை நீக்கும். இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும்.
  6. உடல் ஊட்டச்சத்து உறிஞ்சலை சிறப்பாக செய்ய பீட்ரூட் சாறு உதவுகிறது.
  7. பீட்ரூட் சாறுடன் நெல்லிக்காய் சாறு  கலந்து சாப்பிட்டு வர முகப்பொலிவை கூட்டும். 
  8. பீட்ரூட் சாறு சிறுநீரக எரிச்சலை குறைக்கிறது.
  9. அல்சர் உள்ளவர்கள் பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட குணமாகும். 
  10. பீட்ரூட் சாறு உடல் சோர்வு, மன அழுத்தத்தை குறைத்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
  11. பீட்ரூட் ஜூஸை சாப்பிடுவதால் நாள் முழுவதும் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் சத்துக்களை உறிஞ்சி மற்ற பாகங்களுக்கு அனுப்ப உதவியாக இருக்கும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்