முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் துப்பாக்கிச்சூடு; 100-க்கும் மேற்பட்டோர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூன் 2025      உலகம்
Nigeria-Attack 2025-06-15

Source: provided

அபுஜா : நைஜீரியாவின் மத்திய பெனுவே மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 100 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

நைஜீரியாவின் மத்திய பெனுவே மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மர்மநபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 100 பேர் கொல்லப்பட்டனர். பலர் மாயம் ஆகி உள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் போதுமான மருத்துவ வசதி இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த பதட்டங்கள் பெரும்பாலும் இன மற்றும் மதப் பிளவுகளால் மோசமடைகின்றன. கடந்த மாதம், நைஜீரியாவின் க்வெர் வெஸ்ட் மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் நடந்த தொடர் தாக்குதல்களில் குறைந்தது 42 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 2019ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 500 பேர் உயிரிழந்தனர். 22 லட்சத்திற்கு அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து