முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைநிற்றல் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூன் 2025      தமிழகம்
CM 2024-05-31

Source: provided

சென்னை : கடந்த 4 ஆண்டுகளில் 'இடைநிற்றலே இல்லாத' மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம் என்று பெருமிதம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க கள ஆய்வு நடத்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.  மேலும், ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் கள ஆய்வு செய்த ஆட்சியர் ஜெயசீலன், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ அன்மையில் வெளியானது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையை பலர் வெகுவாக பாராட்டினர்.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்: வாழ்த்துகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், கடந்த 4 ஆண்டுகளில் ‘இடைநிற்றலே இல்லாத’ மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம். இந்த நிலை தொடர அர்ப்பணிப்போடு பணியாற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துகள்!

ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் வேண்டுகோள்: இந்த இயக்கத்தில் நீங்களும் இணைய வேண்டும்! உங்கள் பகுதியில், பள்ளி செல்லாத மாணவர்கள் இருந்தால் கண்டறியுங்கள். ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ என அவர்களுக்கு உணர்த்துங்கள். காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள், நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் என ஒவ்வொரு நிலையிலும் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல அரசின் திட்டங்கள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள். கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதி செய்வோம் என்று முதல்வர் தனது பதிவில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து