முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் விமானங்களை வீழ்த்தியதா பாக்.,? - டசால்ட் நிறுவனம் மறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூன் 2025      உலகம்
Rafale 2024-05-29

Source: provided

பாரிஸ் : ஆபரேஷன் சிந்தூரின் போது ரபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது பொய் என்று டசால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றதை பலரும் கொண்டாடினர். ஆனால் பாகிஸ்தான் மட்டுமே இந்தியாவின் ரபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறிக் கொண்டே இருந்தது. இது பொய்யான தகவல் என்று மத்திய அரசு அப்போதே மறுத்துவிட்டது.

இந்நிலையில் ரபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது பொய் என்று ரபேல் விமானங்களை உற்பத்தி செய்யும் டசால்ட் நிறுவன முதன்மை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவித்துள்ளார்.பிரான்ஸில் இதழ் ஒன்றுக்கு அவர் பேட்டி அளிக்கையில் இதை தெளிவுப்படுத்தி உள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது;டசால்ட் நிறுவனத்திற்கு இந்திய விமானப்படையிடம் இருந்து போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் எங்களுக்கு வரவில்லை. 3 ரபேல் போர் விமானங்களை தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் கூறுவது தவறானது என்று எங்களுக்கு ஏற்கனவே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து