முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூன் 2025      தமிழகம்
vaigai dam-2023-05-04

Source: provided

ஆண்டிப்பட்டி : மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து நீரை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். இதன் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று பொதுப்பணி துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் முழுவதும் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதேபோல் முல்லைப்பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. எனவே அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதன் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்தது. அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளுக்கு முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பேரில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் இ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தனர். இதனைத்தொடர்ந்து விநாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நேற்று முதல் 120 நாட்களுக்கு முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல் 75 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், மீதம் உள்ள 45 நாட்களுக்கு தண்ணீரின் இருப்பை பொறுத்து முறை வைத்தும் தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது திறக்கப்பட உள்ள தண்ணீரின் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று பொதுப்பணி துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து