முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தஞ்சை, கல்லணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூன் 2025      தமிழகம்
CM-2 2025-06-15

Source: provided

தஞ்சாவூர் : தஞ்சை கல்லணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி நீரை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் மூலம் 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவது பற்றி அரசு உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவதோடு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

அதன்படி 2 நாள் பயணமாக (15, 16-ந்தேதிகள்) தஞ்சை மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் கல்லணைக்கு நேற்று வந்து சேர்ந்தது. 

இந்த நிலையில் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதற்காக சென்னையில் இருந்து நேற்று காலை விமானம் மூலம் புறப்பட்டு திருச்சிக்கு பகல் 12.15 மணிக்கு சென்றார். அங்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி உள்ளிட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.

வரவேற்பை பெற்றுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக காரில் கல்லணைக்கு சென்றடைந்தார். அங்குள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி இருந்த ஸ்டாலின், நேற்று மாலை 5 மணியளவில் கல்லணையை திறந்து வைத்தார். கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆறுகள் மூலம் காவிரி நீரை பகிர்ந்து அளிக்கும் வகையில் தண்ணீரை திறந்து விட்டு நெல்மணிகளை தூவினார். இதன் மூலம் 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து