முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். ராணுவ தளபதிக்கு அழைப்பா? - அமெரிக்கா வெள்ளை மாளிகை மறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூன் 2025      உலகம்
White-House--2 - Copy

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவின் 250வது ஆண்டு ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளதாக வெளியான தகவலை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

வாஷிங்டன்னில், 250ம் ஆண்டு ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை அமெரிக்கா சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும், டிரம்ப் பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் பங்கேற்கும் வகையில் அசிம் முனீர் இந்த வாரம் அமெரிக்கா செல்ல இருந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு மீது காங்கிரஸ் விமர்சனம் வைத்தது.

இது தொடர்பாக அக்கட்சி மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், தூதரக ரீதியில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு, அசிம் முனீர் தான் அத்துமீறும் வகையில்பேசினார். அமெரிக்காவின் நோக்கம் என்ன என கேட்டு இருந்தார்.  இதற்கு பதிலடி கொடுத்த பா.ஜ., ''  பொய்ச்செய்திகளை பரப்புவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்'' எனக்கூறியிருந்தது. இதனை வெள்ளை மாளிகை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், இந்த செய்தி தவறானது. எந்த வெளிநாட்டு ராணுவ தளபதிகளையும் அழைக்கவில்லை என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து