முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வாழைத்தண்டியின் மருத்துவ குணங்கள்

  1. சிறுநீரகத்தை வாழைத்தண்டு சீர்படுத்துகிறது,சிறுநீரக கற்கள் கரைய வாழைத்தண்டைவிட வேறு சிறந்த உணவு கிடையாது, வாழைத்தண்டு சாறை குடிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.
  2. வாழைத்தண்டு சாற்றுடன், எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடிக்கலாம். வாழைத்தண்டில் பொட்டாசியம் உள்ளது. எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இவை இரண்டும் இணைந்து சிறுநீரகத்தில் கால்சியம் கற்கள் உருவாவதைத் தடுக்கும், கிட்னி பலப்படும். 
  3. கோடைக் காலத்தில் வாழைத்தண்டை அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் வெப்பம் குறையும், சிறுநீர் எரிச்சல், சிறுநீரில் ரத்தம் கலந்து போவதைக் குணப்படுத்தும். 
  4. நச்சுப்பொருட்களை வெளியேற்றவும், சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கவும் வாழைத்தண்டு உதவுகிறது.
  5. வாழைத்தண்டைகூட்டாகவோ. பச்சையாக சாலட் செய்தோ, பொரியலாக்கியோ, எளிதான முறையில் சாறாக்கியோ குடிக்கலாம். 
  6. சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று காரணமாக உண்டாகும் வலி, அசெளகரியங்களுக்கும் வாழைத்தண்டு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. 
  7. உடலை சுத்தம் செய்வதோடு முக்கியமாக குடல் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது, இதில் நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால் குடல் இயக்கங்கள் சீராகிறது,செரிமானம் மேம்படுகிறது,மலச்சிக்கலும் வராமல் தடுக்கிறது.
  8. சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்த வாழைத்தண்டு உதவியாக இருக்கும்.
  9. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல், மற்றும் உடல் வலியை நீக்கி உடலுக்கு தேவையான சக்தியை வாழைத்தண்டு கொடுக்கிறது.
  10. வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் வாழைத்தண்டு தீர்வாக அமையும். 
  11. வாழைத்தண்டு பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமை பெற்றது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்