முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2லட்சம் பக்தர்கள் திரண்டனர்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி,ஆக.- 15 - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று 2 லட்சம் பக்தர்கள் திரண்டனர். இதனால் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆகிறது. ரூ. 200 கட்டண தரிசனத்திற்கு 8 மணி நேரம் ஆகிறது. பக்தர்களின் கூட்டம் மிகவும் அதிகமாக இருப்பதால் வி.ஐ.பி. தரிசனம் இன்று வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு வசதியாக மகா லகு தரிசனம் அமல்படுத்தப்பட்டது. லட்டு கவுண்டர்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து லட்டும், பிரசாதத்தை வாங்கி சென்றனர். அன்னதான கட்டிடத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. விடுதிகள் அனைத்தும் நிரம்பியதால் ஏராளமான பக்தர்கள் திறந்தவெளி பகுதிகளில் தங்கினர். கோவிலுக்கு ஏற்கனவே தீவிரவாதிகள் மிரட்டல் உள்ளது. மேலும் சுதந்திர தினத்தையொட்டி கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரகசிய கேமிரா மூலம் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago