முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ. கோர்ட்டில் சுப்பிரமணியசாமி பரபரப்பு சாட்சியம்

ஞாயிற்றுக்கிழமை, 18 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி. டிச.18.- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க கோரும் வழக்கில் நேற்று சி.பி. ஐ. கோர்ட்டில் ஆஜராகி சுப்பிரமணியம் சாமி பரபரப்பு சாட்சியம் அளித்தார். ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இப்போது ஆ.ராசா திகார் சிறையில் இருந்து வருகிறார்.

இவ்வழக்கில் 12 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.முன்னாள் தொலை தொடர்பு துறை செயலாளர் சித்தார்த் பெகூராவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு நேற்று முன்தினம் மறுத்துவிட்டது.

இதை தொடர்ந்து இவரும் சிறையில் இருக்கிறார்.

இந்த ஊழல் முறைகேடுகள் ப.சிதம்பர் நிதி அமைச்சராக இருந்த போதுதான் நடந்துள்ளன என்றும் அவருக்கு தெரியாமல் இந்த முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் எனவே 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சாமி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதி மன்றம் அனுமதி ஏற்கனவே அனுமதி அளித்து விட்டது.

இவ்வழக்கில் நேற்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் டாக்டர் சுப்பிரமணியம் சாமி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

2ஜி ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவும் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் கூட்டாக சேர்ந்துதான் 2 ஜி ஒதுக்கீட்டிற்கான விலை நிர்ணய முடிவை எடுத்துள்ளனர். எனவே  சிதம்பரத்தையும் இந்த ஊழல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று  சுப்பிரமணியம் சாமி கேட்டுக்கொண்டார்.

2001 ம் ஆண்டு நிலவரப்படி 2008 லும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அப்போது மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்திருக்கிறார்.  அவருக்கும் இதில் பங்கு இருக்கிறது. எனவே இந்த ஊழலில் ஆ.ராசா மட்டும் குற்றவாளி என்று எடுத்துக்கொள்ள முடியாது என்றும் ஆகவே சிதம்பரத்தையும் இவ்வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் தான் தொடுத்த வழக்கில் சுப்பிரமணியம்சாமி தானே சாட்சியமாக தோன்ற சாட்சியம் அளித்தார்.

ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயத்தில் ஆ.ராசாவை மட்டும் குற்றவாளியாக கூற முடியாது. சிதம்பரத்தை கலந்தாலோசித்துத்தான் ஆ.ராசா இந்த விலை நிர்ணய முடிவை எடுத்துள்ளார்.

எனவே சிதம்பரத்தையும் இந்த ஊழல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று சாமி தனது சாட்சியத்தில் கூறியுள்ளார்.

2008ம் ஆண்டு மத்திய அமைச்சரவை எடுத்த ஒரு முடிவின்படி ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் அப்போதைய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2011, பிப்ரவரி 24 ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தின் ராஜ்ய சபையில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஸ்பெக்டரம் ஒதுக்கீடு தொடர்பான விலை நிர்ணயம் 2003 ம் ஆண்டு மத்திய அமைச்சரவையின் முடிவின்படிதான் செய்யப்பட்டுள்ளது என்றும் அதன்படி அப்போது மத்திய நிதி அமைச்சகமும் மத்திய தொலை தொடர்பு துறையும்தான் இந்த விலை நிர்ணயத்தை செய்துள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த அறிக்கையின்படி பார்த்தால் அப்போது நிதி அமைச்சராக இருந்தது சிதம்பரம் அப்போது தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தது ஆ.ராசா. எனவே இந்த 2008 ம் ஆண்டு நடந்த 2 ஜி ஒதுக்கீடுகள் சிதம்பரத்திற்கும் தெரியும் என்று சாமி கூறினார்.

சாமியின் சாட்சியங்களை நீதிபதி சைனி பதிவு செய்து கொண்டார். பிறகு இந்த வழக்கு விசாரணையை வருகிற 7 ம் தேதிக்கு நீதிபதி சைனி ஒத்திவைத்தார். அன்றைய தினம் மீண்டும் சுப்பிரமணியம் சாமியே சாட்சியம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago