எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம், ஜன. - 7 - இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் இலங்கை மன்னார் சிறையில் அடைக்கப்பட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 2 ம் தேதி போஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கோவிந்தராஜ், நாதன், குமார், ஆறுமுகம் ஆகியோர் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகில் எந்திர கோளாறு ஏற்பட்டது. பின்னர் மீனவர்கள் படகை அங்கே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி உள்ளனர். இதன் பின்னர் கடந்த 4 ம் தேதி காணாமல் போன படகை தேடி ஜெயபால் என்பவருக்கு சொந்தமான படகில் மீட்பு குழுவினர் நடுக்கடலுக்கு தேடி சென்றனர். அப்போது பழுதான படகை இலங்கை கடற்படையினர் பிடித்து இலங்கை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இந்த நிலையில் மீனவர்கள் 4 பேர் மீதும் எல்லை தாண்டி வந்ததாக தலைமன்னார் போலீசார் வழக்குப் பதிவு செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்கள் 4 பேரையும் சிறைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், அவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதால் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என்று இந்திய - இலங்கை நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு பிரதிநிதி அருளானந்தம் தெரிவித்தார். இதற்கிடையில் கடலில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரத்தில் சகாயம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மார்சிலின், கார்மேகம், முனியசாமி, அலெக்சாண்டர் ஆகிய 4 பேர் மீன்பிடிக்க சென்றனர். அப்போது இலங்கை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் கைது செய்து நெடுந்தீவு கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


