எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஜன. - 9 - ஏற்கனவே திட்டமிட்டபடி இந்திய ராணுவக் குழு 3 நாள் பயணமாக சீனாவுக்கு நாளை 10 ம் தேதி செல்லவுள்ளது. பாதுகாப்பு துறை பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் 30 பேர் கொண்ட இந்திய ராணுவக் குழுவினர் சீனா செல்ல இருந்தது. இந்நிலையில் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த இந்திய விமானப் படை அதிகாரி பாங்கிங்குக்கு விசா வழங்க சீனா மறுத்து விட்டது. இதையடுத்து இந்த பயணம் தள்ளி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு மாறாக திட்டமிட்டபடி இந்திய குழு சீனா செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் முன்னர் அறிவிக்கப்பட்டது போல் அல்லாமல் 30 பேருக்கு பதிலாக முப்படைகளை சேர்ந்த 15 பேர் மட்டுமே சீனா செல்லவுள்ளனர். இந்த குழு சீனாவில் பெய்ஜிங், ஷாங்காய், நான்ஜிங் நகரங்களுக்கு செல்லவுள்ளது. அருணாசல பிரதேசம் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடி வரும் சீனா அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விசா அளிப்பதில்லை. இதற்கு இந்தியா அவ்வப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதே போன்று 2010 ல் ஜம்மு காஷ்மீரில் பணியில் இருந்த வடக்கு மண்டல கமாண்டர் ஜஸ்வாலுக்கு விசா அளிக்க சீனா மறுத்தது. அப்போது இரு தரப்பு உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய தரப்பில் பல்வேறு முயற்சிகளுக்கு பின் கடந்த ஆண்டு ஜூனில் இந்திய ராணுவ குழு சீனா சென்றது. கடந்த மாதம் சீன ராணுவ குழு இந்தியாவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


