எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், ஜன.11 - தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் அமைப்பின் நிறுவனத்தலைவர் பசுபதி பாண்டியன் நேற்று மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். மாநில தேவேந்திரகுல வேளாளர் அமைப்பின் நிறுவனத்தலைவர் பசுபதிபாண்டியன் நேற்று மாலை 6 மணியளவில் திண்டுக்கல் நந்தவனபட்டியில் உள்ள அவரது வீட்டுமுன்பே படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த படுகொலை தொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் திண்டுக்கல் நகரில் திடீரென பதட்டம் ஏற்பட்டது. நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலையை செய்தது யார்? கொலை நடந்தது எதற்காக? முன்விரோதம் காரணமா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதும் ஆங்காங்கே பஸ்கள் நிறுத்தப்பட்டதாக பின்னர் வந்த தகவல்கள் தெரிவித்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


