எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜன.11 - டெல்லியில் மொத்தம் விற்பனை செய்யப்படும் பாலின் அளவில் 70 சதவீதம் பால் கலப்படமானது என்று அரசு ஏஜென்சிகளாலேயே கண்டறியப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியத்திற்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே பால் சாப்பிடுவது வழக்கம். ஆனால் அந்த பாலில் கலப்படம் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. டெல்லியில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்ட பால்களில் 71 மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றில் 50 மாதிரிகள் தரமற்ற பால் என்றும், இவற்றில் குளுக்கோஸ் மற்றும் பால் பவுடர் கலக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. பொதுவாக பால் பவுடர் என்பது பால் பற்றாக்குறை ஏற்படும் காலத்தில் பாலுக்கு பதிலாக பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த பால் பவுடரை பாலாக்கி அதை நல்ல பாலோடு கலந்து விற்பது இதன் மூலம் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் மற்றொரு அதிர்ச்சி தரக்கூடிய கலப்படமும் பாலில் செய்யப்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சலவை சோப்பு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள், கொழுப்பு, யூரியா போன்றவையும்கூட கலப்பட பாலில் இருந்ததும் இந்த ஆய்வில் தெரியவந்தது. இதுமட்டுமல்லாமல் பாரம்பரியமாக நமது நாட்டில் பாலில் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்வதும் இந்த ஆய்வில் தெரியவந்தது. இந்த சோதனைகளின் அடிப்படையில் பார்க்கும்போது 68.4 சதவீத மாதிரிகள் கலப்படமான பால் என்று கண்டறியப்பட்டது.
நாட்டிலேயே கோவா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் 100 சதவீதம் சுத்தமான பால் விற்கப்படுகிறது என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்தது. தமிழ்நாட்டில் 88 சதவீதம் பால் தரமானதாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


