எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அகர்தலா, ஜன. 14 - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை திரிபுரா மத்திய பல்கலைக் கழகம் வழங்கியது. அமைதி மற்றும் பன்முகத் தன்மை கொண்ட ஜனநாயகத்துக்கு பாடுபட்டு வரும் அவரை கவுரவிக்கும் வகையில் இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி தலைமை வகித்தார். ஹசீனாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி பேசிய அவர், சமூகத்தை பாதிக்கும் பயங்கரவாதம், தீவிரவாதத்தை எதிர்த்து போராடி வரும் அவரது தைரியத்தை பாராட்டுகிறேன். மிதவாதம், சகிப்பு தன்மை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை வங்கதேசத்தில் சிறப்பாக அமல்படுத்தி வரும் உங்கள் செயலுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம் என்றார். மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் மொழி, கலாசார ரீதியாக பொதுவான அம்சங்கள் உள்ளன. ஹசீனா பொறுப்பேற்றதும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் மாநில கவர்னர் பாட்டீல், திரிபுரா மத்திய பல்கலைக் கழக துணைவேந்தர் அமியாகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


