முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய விமான நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜன. - 19 - மொழிபெயர்க்கவே எனக்கு நேரமில்லை. அப்படி இருக்கும் போது ரகசியங்களை நான் எங்கே வெளியிடுவது. உண்மை தானாக வெளியே வரும் என்று பாகிஸ்தானுக்கு இந்திய ரகசியங்களை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மாதுரி குப்தா தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் தகவல் தொடர்பு துறை செயலாளராக இருந்தவர் மாதுரி குப்தா. அவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு இந்திய ரகசியங்களை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த 2010 ம் ஆண்டு அவரை கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். கடந்த 21 மாதங்களாக திகாரில் இருந்த அவர், கடந்த 7 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.  இந்நிலையில் இத்தனை நாளாக மவுனம் காத்து வந்த மாதுரி பிரபல ஆங்கில டி.வி. சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது சிறையில் இருந்து என்னை வலுவான மனுஷியாக்கியுள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு வெளியே வந்துள்ளேன். இனி என் வாழ்க்கையை முதலில் இருந்து துவங்க வேண்டியதுள்ளது. இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அது குறித்து பேசிது உகந்த நேரமல்ல. வரும் மார்ச் மாதம் 22 ம் தேதி இந்த வழக்கு விசாரணை துவங்குகிறது. உண்மை தானாகவே வெளியே வரும். விசாரணை நடக்கும் போது மக்களை இது பற்றி தெரிந்து கொள்வார்கள். நான் உருது மொழி பெயர்ப்பாளராக இருந்தேன். பாகிஸ்தானில் 12 முதல் 13 உருது நாளிதழ்கள் உள்ளன. அவை அனைத்தையும் படித்து மொழி பெயர்க்கவே எனக்கு நேரமில்லை. அப்படியிருக்கையில் ரகசியங்களை எங்கே வெளியிடுவது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago