Idhayam Matrimony

20 -க்கு 20 இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரிட்சை

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2012      விளையாட்டு
Image Unavailable

சிட்னி, பிப். - 1 - இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது 20 -க்கு 20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று பிற்பகல் நடக்க இருக்கிறது. இதற்காக இந்திய  அணி வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர்.  முன்னதாக நடைபெற்ற ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததைத் தொடர்ந்து இந்திய அணி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.  இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் இன்று நடக்க இருக்கும் முதலாவது 20 -க்கு 20 போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர். தவிர, இதில் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகின்றனர்.  கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் மைக்கேல் கிளார்க் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.  இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி களுக்கு இடையே முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் ஆஸி. அணி 4 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணியை வாஷ் அவுட்டாக்கியது.  இதனைத் தொடர்ந்து முத்தரப்பு ஒரு நாள் தொடர் நடக்க இருக்கிறது. 5 -ம் தேதி துவங்கும் இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.  இதற்கிடையே இரண்டு 20 -க்கு 20 போட்டி இரு அணிகளுக்கு இடையே நடக்கிறது. இதன் முதல் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் இந்திய நேரப்படி 2.00 மணிக்கு துவங்குகிறது. அடுத்த போட்டி 3-ம் தேதி நடக்கிறது.  20 -க்கு 20 போட்டிக்கான இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெற்ற மூத்த வீரர்களான ராகுல் டிராவிட் மற்றும் லக்ஷ்மண் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர்.  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி மற்றும் 20 -க்கு 20 போட்டிகளில் டெஸ்ட் போட்டி போல அல்லாமல் இந்திய அணியின் ஆட்டம் வித்தியாசமாக இருக்கும் என்று மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரெய்னா சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
எனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 20 -க்கு 20 போட்டியில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படு த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது 20-க்கு 20 போட்டி  இன்று பிற்பகல் 2.00 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி ஸ்டார் கிரிக்கெட் மற்றும் தூர்தர்ஷ ன் ஆகிய சேனல்களில் நேரடியாக ஒளி பரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago