முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - இலங்கை அணிகள் மோதிய ஆட்டம் டிராவானது

புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012      விளையாட்டு
Image Unavailable

அடிலெய்டு, பிப். - 15  - ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அடிலெய்டு நகரில் நடந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.  காமன்வெல்த் பேங்க் சார்பிலான முத்தரப்பு ஒரு நாள் தொடர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 2 வார காலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா , இந்தியா மற்றும் இலங்கை ஆகிய 3 நாடுகள் கோப்பைக்காக களம் இறங்கியுள்ளன.  அடிலெய்டு நகரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த இரு அணிகளும் ஏற்கனவே ஏஒரு முறை மோதி விட்டன, இது இரண்டாவது முறையாக இரு அணிகளும் மோதின.
முன்னதாக நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இருந்தது. எனவே இந்திய அணி மீண்டும் வெற்றி பெற்று விடும்என்று ரசிகர்கல் எதிர்பார்த்தனர்.  ஆனால் முதல் போட்டியில் அடிவாங்கிய இலங்கை அணி இன்தப் போட்டியில் கடும் சவாலை அளித்தது. இதனால் இந்தப்போட்டி இரு அணிகளுக்கும் வெற்ஹி தோல்வி இன்றி இறுதியில் டிராவில் முடிவடைந்தது. இலங்கை அணிக்கு எதிரான இந்த லீக் ஆட்டத்தில் துவக்க வீரர் கெளதம்காம்பீர் மற்றும் கேப்டன் தோனி  இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்துஅணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தனர்.  பெளலிங்கின் போது, வினய் குமார் நன்றாக பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினார். அஸ்வின் 2 விக்கெட் எடுத்தார். தவிர, பதான் 1 விக்கெட் எடுத்தார்.  அடிலெய்டில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 236 ரன்னை எடுத்தது.   இலங்கை அணி தரப்பில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சண்டிமால் அதிகபட்சமாக 91 பந்தில் 81 ரன்னை எடுத்தார். தவிர, ஜெயவர்த்தனே 49 பந்தில் 43 ரன்னையும், சங்கக்கரா 56 பந்தில் 31 ரன்னையும், சேனனாயகா 22 ரன்னையும் எடுத்தனர்.  இந்திய அணி சார்பில் வினய்குமார் 46 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். அஸ்வின் 30 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். தவிர பதாந் 1 விக்கெட் எடுத்தார்.  இந்திய அணி 237 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இலங்கை அணி வைத்தது. பின்பு களம் இறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்னை எடுத்தது.
இரு அணிகளும் ஒரே மாதிரியான ஸ்கோரை எடுத்ததால் இந்தப் போட்டி வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிவடைந்தது. கேப்டன் தோனி இறுதிவரை நிலைத்து ஆடியதால் போட்டி டிராவானது.
இந்தப் போட்டியில் இந்திய அணி தரப்பில்துவக்க வீரரான காம்பீர் அதிகபட்சமாக, 106 பந்தில் 91 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் ரன் அவுட்டானார்.
கேப்டன் தோனி 69 பந்தில் 58 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
தவிர, டெண்டுல்கர், கோக்லி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தலா 15 ரன்னும், அஸ்வின் 14 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
இலங்கை அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான மலிங்கா 53 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட எடுத்தார். பெரீரா 45 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, குலசேகரா 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனா காம்பீர் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்