முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாத தடுப்பு மையத்திற்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை,பிப்.- 18  - மத்திய அரசு தொடங்க உள்ள பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்றாயக், பீகார் முதல்வர் நிதீஷ்குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் இணைந்துள்ளனர். உ,பி.முதல்வர் மாயாவதியின் கருத்து இதுவரை வெளிப்படவில்லை. இது குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக் கூறியுள்ளதாவது:- ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பாக தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் மார்ச் 1​ந்தேதி தொடங்குவதாக தகவல் வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த திட்டம் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறிப்பது போல் இருக்கிறது. அதனால் இத்திட்டத்தை கைவிடும்படி கடந்த பிப்.14​ந்தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த தகவலை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.  இந்த அமைப்புக்கு எதிரான மம்தாவின் கருத்தை தான் ஆதரிப்பதாக கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக அவர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனும் ஆலோனையும் நடத்தியுள்ளார். தற்போது இந்த பயங்கரவாத தடுப்பு அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க மம்தா பானர்ஜி, ஜெயலலிதா, நிதீஷ்குமார், மற்றும் நவீன் பட்நாயக் ஆகிய 4 மாநில முதல்வர்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ​ மாநில அரசின் உரிமையை மத்திய அரசு என்றும் பறிக்காது. மம்தா எழுதியாக கூறும் எதிர்ப்பு கடிதம் இதுவரை உள்துறை அமைச்சகத்துக்கு வந்து சேரவில்லை என்று கூறியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு ஒரு செய்தி குறிப்பிப்பை வெளியிட்டுள்ளது. பயங்கர வாதத் தடுப்பு மையம்  தொடங்குவது குறித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு  நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலிதா பிரதமர்மன் மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: - இந்திய இறையாண்மையைக் கட்டிக் காப்பாற்றி உயர்த்திப் பிடிப்பதிலும், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப் பாட்டை ஆதரிப்பதிலும் எனக்குள்ள அர்ப்பணிப்பு  உணர்வை நீங்கள் அறிவீர்கள். எத்தகைய ஒரு சூழலிலும் இந்தியாவின் பாதுகாப்பு எத்தகைய சமரசத்திற்கும் உட்பட்டதல்ல என்ற நிலையில் சில விசயங்கள் குறித்து உங்களின் கவனத்தைச் செலுத்த விழைகிறேன். உள்துறை அமைச்சகம் கடந்த 3ம் தேதி ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது. அதில் மத்திய புலனாய்வுத் துறையின் கீழ், தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் என்.சி.டி.சி  ஒன்றை மார்ச் 1ம் தேதி தொடங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் என்.சி.டி.சி. யாரையும் கைது செய்யவோ, அவர்களின் இடத்தை சோதனை இடவோ முடியும்.மேலும் மாநிலத்திற்குள் தனி புலனாய்வுக் குழுவையும் அமைக்கும் அதிகாரம் அதற்குள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவின் கீழ் என்.சி.டி.சி அறிக்கைகள், ஆவணங்கள், சான்றாதாரங்கள், எந்தவிதமானதாலும், அத் தகவல்கள், எந்தஒரு நிறுவனத்திடமிருந்தும், அமைப்பிடமிருந்தும் இதற்குத் தேவையான தகவல்களை பெறும் அதிகாரத்தைப் பெறுகிறது.

இத்தகைய சூழலில், சில விஷயங்களில் உள்ள ரகசிய மாக வைத்திருக்க வேண்டிய தகவல்களை கூட அதற்கு அளிக்க வேண்டியதும் இருக்கும்.

இந்த சட்டப்பிரிவு, எந்தவிதமான பொதுப்புகளையும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு அதிகாரத்தை அது பெறுகிறது.

யாரையும் கைது செய்வது, சோதனை செய்வது, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது, பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிப்போர் மீது எடுக்கப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பலவிதமான செயல் முறைகள் இது வரை மாநில அரசின் உள்துறை செயலகத்திடம் இருந்தது. என்.சி.டி.சி.யின் இந்த விசேஷ அதிகாரத்தின் மூலம், மாநில உள்துறை செயலகத்திடம் இருந்த அதிகாரங்கள் இனி மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் வசமும் என்.சி.டி.சி.யில் உள்ள மத்திய புலனாய்வு அதிகாரிகள் வசமும் கை மாறுகிறது, சுருக்கமாகச் சொல்லப்போனால் மத்திய மாநில இணைப்புப் புலனாய்வுக் குழுக்களை என்.சி.டி.சி அமைப்பானது, அமைப்பதின் மூலம் மாநில அரசின் உரிமைகளில் அது தலையிடுகிறது.

மேலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதிலும், அதை யொட்டி எடுக்கும் நடவடிக் கைகளும் தமிழ்நாடு அரசு சிறப்பான சாதனைப் பட்டியலைக் கொண்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு எந்தவித மான பின்வாங்குதலும் இல்லாமல் முன்னோக்கி செய்கிறது.

என்னுடைய அனுபவத்தில் மாநில காவல் துறையும் புலனாய்வு அமைப்பும் எப்போதுமே தீவிரவாதிகளையும் அவர்களின் அமைப்புகளையும் ஒடுக்குவதில் சிறந்து விளங்குகிறது. அதற்காக மாநில காவல் துறையானது. நவீனப் படுத்தப்பட்டு செயல் படுகிறது. பல அசம்பாவித சம்பவங்களையும் தடுத்துள்ளது.

வெறும் ஒரு மையத்தை அமைப்பதும், தகவல்களைப் பெறு வது மட்டுமே அதனுடைய நோக்கத்தை அடைய முடியாது. அகையால் என்.சி.டி.சி. அமைப்பது குறித்த மாநிலங்களின் வேறுபாடுகளை நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன். இவ்விஷயத்தில் பிறமாநில முதல்வர்களின் கருத்துடன் நானும் உடன் படுகிறேன்.

இவ்விஷயத்தில் தாங்கள் உடனடியாக கவனத்தை செலுத்த வேண்டும். மேலும் மாநில அரசுகளுடனும், மாநில போலீஸ் உயரதிகாரிகளுடனும் உடனடியாக கலந்து பேச வேண்டும் பயங்கவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற மிகுந்த முக்கியத்துவமுள்ள இவ்விஷயத்தில் மாநிலங்களில் கருத்துக்களை எடுத்துக் கொள்ளாமல், தேசிய பயங்கரவாத தடுப்பு நடைமுறைகள் எப்படி செயல்பட முடியும்.

ஆகையால் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் உள்துறை அமைச்சகத்தின் அந்த அதிகார நடவடிக்கை, குறித்து உரிய நடவடிக்கையை தாங்கள் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்