முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி கப்பல் கொச்சிக்கு கொண்டுவரப்பட்டது மாலுமிகளிடம் விசாரணை

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

கொச்சி,பிப்.- 18 - இந்திய மீனவர்கள் 2 பேர்களை சுட்டுக்கொன்றவர்கள் வந்த இத்தாலி நாட்டு கப்பல் கொச்சி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. கப்பலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கப்பலில் வந்த இத்தாலி நாட்டுக்காரர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தாலி நாட்டு கப்பல் ஒன்று சரக்கை ஏற்றிக்கொண்டு கேரள கடல்பகுதி வழியாக வந்தது. அப்போது அந்த வழியாக கடலில் மீன்படிக்கச் சென்ற இந்திய மீனவர்கள் மீது கப்பலில் இருந்த இத்தாலிய மாலுமிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அஜிஸ் பிங்கி, கேரள மாநிலத்தை சேர்ந்த வாலன்டின் என்ற ஜெலஸ்டின் ஆகிய இருவரும் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து பலியானார்கள். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மீனவர்களை சோமாலியா நாட்டு கடல் கொள்ளைக்காரர்கள் மாதிரி நினைத்துக்கொண்டு இத்தாலி நாட்டு மாலுமிகள் துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் அந்த கப்பலை கொச்சி துறைமுகத்திற்கு இந்திய அதிகாரிகள் நேற்றுக்காலையில் கொண்டுவந்துள்ளனர். கப்பலில் இருந்த மாலுமிகளிடம் கொச்சி துறைமுக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடந்துவிடாமல் கப்பலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாலுமிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். படகில் 11 பேர் இருந்ததாகவும் இவர்கள் கொல்லம் மாவட்டத்தில் உள்ள நீண்டகரையில் இருந்து மீன்படிக்க சென்றதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் இந்தியாவுக்கான இத்தாலி நாட்டு துணைத்தூதர் ஜியாம்பாவ்லோ குடில்லோ நேற்றுமுன்தினமே கொச்சி வந்துவிட்டார். இதற்கிடையில் துப்பாக்கி சூட்டில் பலியான கேரளத்தை சேர்ந்த ஜெலஸ்டின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள மூர்த்தக்காராவிலும் பிங்கியின் உடல் குமரி மாவட்டத்தில் உள்ள பூதுரையிலும் நேற்றுமாலையில் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த இந்த இரண்டு பேர்களின் குடும்பத்தார்களுக்கு கேரள அரசு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. இத்தாலி நாட்டு மாலுமிகளிடம் நஷ்டஈடு வாங்க ஏற்படும் சட்ட செலவு முழுமையும் ஏற்றுக்கொள்ளவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே நிதியுதவி அளித்துவிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago