முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி: ஜான்பாண்டியன்

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

சங்கரன்கோவில், பிப்.21 -   சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதாக தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நிறுவனர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.  சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நிறுவனர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  இடைத்தேர்தல் குறித்து இதுவரை எந்தக்கட்சியும் எங்களை அணுகவில்லை. வரும் 25ம் தேதி எங்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் சங்கரன்கோவிலில் நடைபெறுகிறது. அதற்குள் நாங்கள் அறிவித்துள்ள கோரிக்கைகளை ஏற்றால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதில் எங்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்றார். மேலும் அப்படி எந்தக்கட்சியுடனும் கூட்டணி இல்லாத பட்சத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து களம் இறங்கும் என்றும் தெரிவித்தார். தங்கள் கட்சியின் இறுதி முடிவு 25-ம் தேதி நடைபெற உள்ள செயற்குழு கூட்டத்தின் வாயிலாக அறிவிக்கப்படும் என்று கூறினார். இந்த பேட்டியின் போது நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இன்பராஜ், துணை செயலாளர் செல்வராஜ், மாநகர் மாவட்ட செயலாளர் கண்மணி மாவீரன், மாநில அமைப்பு செயலாளர் நெல்லையப்பன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பொன்ராஜ், மாவட்ட மாணவர் அணி தலைவர் முனியசாமி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் அருண், சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகன், குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் இன்பராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் அகஸ்டின், சங்கரன்கோவில் நகர இளைஞர் அணி செயலாளர் நாராயணன், குருவிகுளம் ஒன்றிய பொறுப்பாளர் முத்துப்பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago