எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, பிப். 25 - இந்திய விண்வெளி கமிஷனின் முன்னணி விஞ்ஞானியான ரோதம் நரசிம்ஹா பதவி விலகியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை அவர் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அனுப்பி வைத்தார். இஸ்ரோவின் சர்ச்சைக்குரிய ஆண்ட்ரிக்ஸ் தேவாஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உட்பட 4 பேர் அரசு பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அணுகுமுறையை விஞ்ஞானிகள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் விஞ்ஞானிகளை அரசு நடத்தும் விதத்துக்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையிலேயே நரசிம்ஹா பதவி விலகியிருப்பதாக கூறப்படுகிறது.
பதவி விலகியுள்ள ரோதம் நரசிம்ஹா, இந்தியாவின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிபுணராவார். பிரதமர் தலைமையிலான விண்வெளி கழகத்தின் உறுப்பினராக உள்ள அவர், தனது அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளி துறையில் பணியாற்றிய நரசிம்ஹா, சந்திராயன் 1 விண்கலம், பி.எஸ்.எல்.வி. , ஏ.எஸ்.எல்.வி செயற்கை கோள் ஆகியவற்றை வெற்றிகரமாக செலுத்தியதில் முக்கிய பங்கும் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


