முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சசிகலா மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது-ஜெயலலிதா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஏப்.- 1 - சசிகலா மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சசிகலாவை முதல்வர் ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கினார். அதையொட்டி வெளியில் தனியாக அவர் இருந்தார். சசிகலா நீக்கத்தையொட்டி அவரின் உறவினர்களையும் கட்சியிலிருந்து முதல்வர் ஜெயலலிதா நீக்கினார். இதன்பின் கடந்த 28-ம் தேதியன்று சசிகலா ஒரு அறிக்கையை வெளியிட்டார். தான் வெளியில் வந்தபின்தான் தனது உறவினர்கள் தனது பெயரைப் பயன்படுத்தி முதல்வருக்கு துரோகம் விளைவித்தது தெரியவந்ததாகவும், அது தனக்கு தெரியவந்தபோது அதிர்ச்சி அடைந்ததாகவும், தனது சகோதரியான முதல்வருக்கு தான் கனவிலும்கூட துரோகம் இழைக்க நினைத்ததில்லை என்றும், தனது பெயரைப் பயன்படுத்தி கட்சிக்கும், ஆட்சிக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக முதல்வருக்கும் துரோகம் இழைத்தவர்களை தான் மன்னிக்கத் தயாராயில்லை என்றும், அவர்களுக்கு தனக்கு எந்த தொடர்பும் இனிமேல் இல்லை என்றும், தனது சகோதரிக்கே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டதாகவும், சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இப்போது இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வி.கே.சசிகலா எனக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதே பொருள் கொண்ட ஒரு அறிக்கையினையும் அவர் வெளியிட்டுள்ளார். வி.கே.சசிகலா அளித்துள்ள விளக்கத்தினை நான் ஏற்றுக் கொள்கிறேன். 19.12.11 அன்று வி.கே.சசிகலா மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. அதே சமயத்தில், 19.12.11 அன்று ம.நடராஜன், திவாகர், டி.டி.வி.தினகரன், வி.பாஸ்கரன், வி.என்.சுதாகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன், இராவணன், அடையாறு  மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி.மகாதேவன், தங்கமணி ஆகியோர் மீதும், 22.12.11 அன்று கலியபெருமாள், எம்.பழனிவேல் ஆகியோர் மீதும், 26.1.12 அன்று தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி, சந்தானலட்சுமி சுந்தரவதனம், சுந்தரவதனம் மற்றும் வைஜெயந்தி மாலா ஆகியோர் மீதும் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த நடவடிக்கை அப்படியே தொடரும். எனவே, கட்சியின் உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago