எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஜூலை. - 4 - விமானிகளின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் நீதிமன்றத்தில் உறுதியளித்ததைத் தொடர்ந்து தங்களது 58 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதாக விமானிகள் அறிவித்துள்ளனர். டெல்லி ஐகோர்ட்டில் விமானிகள் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, பணி நீக்கம் செய்யப்பட்ட விமானிகளை மீண்டும் பணியில் சேர்ப்பது உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிப்போம் என்று ஏர் இந்தியா நிறுவனம் உறுதியளித்தது. இதைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தைக் கைவிடுவதாக ஏர் இந்தியா நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாக விமானிகள் எழுதிக் கொடுத்துள்ளனர். ட்ரீம்லைனர் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சியில் பாரபட்சம் காட்டுவதாக புகார் தெரிவித்து விமானிகளின் போராட்டம் தொடங்கியது. மேலும் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களும் நடத்தப்பட்டன. தற்போது அனைத்து விமானிகளுமே போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்புகின்றனர். பணி நீக்கம் செய்யப்பட்ட 100 விமானிகளும் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


