முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தல்: ஐக்கிய ஜனதா தளத்தின் இரட்டைவேடம்

செவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜூலை. - 17 - ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரித்து பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை கலகலக்க வைத்தது ஐக்கிய ஜனதா தளம். அதே போல் துணை ஜனாதிபதி தேர்தலிலும் கூட அன்சாரியையே ஒருமனதாக வேட்பாளராக்கலாம் என்று கருத்துத் தெரிவித்திருந்தார் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார். ஆனால் துணை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் ஓடிவிடாமல் இருக்க அக்கட்சியின் தலைவரான சரத்யாதவையே வேட்பாளராக அறிவிக்க திட்டம் போட்டது பா.ஜ.க. ஆனால் போட்டியிடப் போவதில்லை என்று சரத் யாதவ் கூறிவிட்டார். இருப்பினும் தம்மை வேட்பாளர் நிலைமைக்கு பரிசீலித்து விட்ட பா.ஜ.க.வை விட்டு போக மனமில்லாமல் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.  அதில் ஜனாதிபதி தேர்தலுக்கும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதாவது பிரணாப் முகர்ஜி பழுத்த அரசியல்வாதி. நல்ல அனுபவம் உள்ளவர் என்பதால் மட்டுமே அவரை ஆதரித்தோம். அதற்காக காங்கிரஸை ஆதரிக்கிறோம் என்று அர்த்தம் அல்ல. நான் அரசியலுக்கு வந்த நாள் முதல் காங்கிரஸை ஆதரித்தது இல்லை என்று கூறி தாம் பா.ஜ.க அணியில்தான் இருப்போம் என்று உறுதிப்படுத்தியிருக்கிறார். இருந்தாலும் ஐக்கிய ஜனதா தளம் பிரணாப் முகர்ஜியை ஆதரித்ததால் ஐக்கிய ஜனதா தளம் ஆளுகிற பீகார் மாநிலத்துக்கு ஒரு சிறப்பு நிதி வழங்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்