முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் துரித நடவடிக்கையால் காணாமல் போன 10 மீனவர்கள் மீட்பு

செவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை.- 17 - கடந்த 12 -ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற தமிழகத்தைச் சேர்ந்த மீன்வர்கள் காணாமல் போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட துரித நடவடிக்கையால் இலங்கை கடற் பகுதியிலிருந்து அவர்கள் மீட்கப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டனர். இது பற்றிய விபரம் வருமாறு:- கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடல்பொருள் ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தில் பதிவு  செய்யப்பட்ட டி.என். 2/குஏ/01305/11 என்ற பதிவு எண் கொண்ட மீன்பிடி விசைப்படகு ஒன்று, 10 மீனவர்களுடன் 12​07​2012 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றது. அப்படகு அன்றே கரைக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அப்படகு கரைக்கு திரும்பாததால், காணாமல் போனதாக தகவல் பெறப்பட்டது. காணாமல் போன படகு மற்றும் 10 மீனவர்களையும் உடனடியாக தேடிக் கண்டுபிடித்திட  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டதின்பேரில், கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய கடலோர காவற்படை அதிகாரிகளுடன் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளப்பட்டு மீனவர்களை தேடும் பணி மீன்வளத் துறையால் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே 10 மீனவர்கள் மற்றும் படகும் இலங்கைக்குட்பட்ட பகுதியில் இலங்கை மீனவர்களால் காப்பாற்றப்பட்டதாக அறியவந்தது.    இந்திய கடலோர காவற்படை, கொழும்பிலுள்ள கடலோர மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்துடன் தொடர்பு கொண்டு இதனை உறுதிபடுத்திய பின்னர், அகல்யாபாய் என்ற கப்பலை அனுப்பி, மீனவர்களையும், படகினையும் மீட்டு, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு நேற்று அதிகாலை (16​07​2012) கொண்டு சேர்த்தது. பின்னர், மேற்படி 10 மீனவர்களும் சின்னமுட்டம் சென்றடைந்தனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  மேற்கொண்ட  துரித நடவடிக்கை காரணமாக, மீனவர்கள் உடனடியாக மீட்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்