முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி , துணைஜனாதிபதி தேர்தலில் நடுநிலைவகிக்க மம்தாகட்சி முடிவு

புதன்கிழமை, 18 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா. ஜூலை. - 18 - நடைபெற உள்ள ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில் தனது  கட்சி நடுநிலை வகிக்கும் என்று திரிணாமுல்  காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். வருகிற 19 ம் தேதி ஜனாதிபதி தேர்தலும் ஆகஸ்ட் 7 ம் தேதி துணை ஜனாதிபதி  தேர்தளும் நடைபெற உள்ளது. ஜனாதிபதி தேர்தலில்  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி  சார்பில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற  முன்னாள் சபாநாயகர் பி.ஏ. சங்மாவும் போட்டியிட்டு உள்ளனர். மத்தியில் ஆளும் கூட்டணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  தலைமையிலான திரிணாமுல்  காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்த போதிலும்  பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க முடியாது என்று கூறிவிட்டது. மம்தாவின் ஆதரவை பெற பிரணாப் முகர்ஜியும்  காங்கிரஸ் கட்சியும் மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. இதே போல பி.ஏ. சங்மாவும்  தனக்கு ஆதரவு அளிக்குமாறு மம்தா பானர்ஜியை  கேட்டுக்கொண்டார்.  ஆனால் அவருக்கும் மம்தா ஆதரவு தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில்  துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் மாதம் 7 ம் தேதி நடைபெறும் என்று  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இதை அடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில்  தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியே இந்த துணை ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மூத்த பா.ஜ.க. தலைவரும் முன்னாள் மத்திய  அமைச்சரருமான ஜஸ்வந்த் சிங் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடள்ளார் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மம்தா பானர்ஜி தனது  கட்சியின் நிலை குறித்த தெளிவான முடிவை நேற்று அறிவித்துள்ளார். ஜனாதிபதி  மற்றும் துணை  ஜனாதிபதி தேர்தல்களில் தங்களது கட்சி நடுநிலை வகிக்கும் என்றும்  தங்களது  கட்சியை  சேர்ந்த எம்.பி.க்கள் , எம்.எல்.ஏ.க்கள் இந்த தேர்தல்களில்  ஓட்டு போட மாட்

டார்கள் என்று மம்தா அறிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் இந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் போட்டியிட வேண்டும் என்று மம்தா பானர்ஜி தனது விருப்பத்தை தெரிவித்து  இருந்தார். ஆனால்  அப்துல் கலாம்  தான்  இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று  கூறி விட்டார். 

இதனால் தனது  முடிவை இதுவரை  தெரிவிக்காமல் இருந்த மம்தா பானர்ஜி நேற்று இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்