முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை ஜனாதிபதி தேர்தல் ஜஸ்வந்த்சிங் வேட்புமனு தாக்கல்

சனிக்கிழமை, 21 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை.- 21 - துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க. மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தற்போதைய துணை ஜனதாபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வருகிற  ஆகஸ்டு மாதம் 10 ம் தேதியுடன் முடிவடைகிறது. இதை  தொடர்ந்து புதிய  துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் மாதம் 7 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ்  தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியே மீண்டும்  போட்டியிடுகிறார். இவர்  தனது வேட்பு மனுவை ஏற்கனவே  தாக்கல் செய்து விட்டார். இந்த நிலையில் பா.ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பா.ஜ.க.மூத்த தலைவர் ஜஸ்வந்த்  சிங் நேற்று தனது வேட்பு  மனுவை  தாக்கல் செய்தார். பா.ஜ.க.மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, லோக் சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், ஐக்கிய ஜனதா தளம் கட்சி  தலைவர் சரத்  யாதவ் ஆகியோர் உடன் இருந்தனர். துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஜஸ்வந்த் சிங் கடந்த 16 ம் தேதி அறிவிக்கப்பட்டார். லோக் சபை செக்ரட்டரி ஜெனரலும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரியுமான டி.கே. விஸ்வநாதனிடம் ஜஸ்வந்த் சிங் தனது வேட்பு மனுவை  தாக்கல்  செய்தார்.

ஜஸ்வந்த் சிங் சார்பில் எல்.கே. அத்வானி,  சுனிதா மஹாஜன், யஷ்வந்த் சின்கா ஆகியோர்  தலா ஒரு செட் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வேட்பு மனு  தாக்கல்  நிகழ்ச்சியில் பா.ஜ.க.மூத்த  தலைவர் அருண்  ஜேட்லி, சிவ சேனா கட்சியை  சேர்ந்த ஆனந்த கீத்தே உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர். பா.ஜ.க. மூத்த  தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்  அமைச்சரவையில்  மத்திய  வெளியுறவுத்துறை அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும்  பாதுகாப்பு  துறை அமைச்சராகவும் இருந்தவர்.

இவர்  ராஜ்ய சபை எதிர்க்கட்சி தலைவரகவும் இருந்தவர். ராஜஸ்தான்  மாநிலத்தை  சேர்ந்த ஜஸ்வந்த் சிங்கிற்கு  தற்போது 74 வயதாகிறது. இவர் பாகிஸ்தானின்  தந்தை என்றழைக்கப்படும் ஜின்னாவை பற்றி கூறிய கருத்து  பெரும்  சர்ச்சையில் சிக்கியது. இதை அடுத்து அவர் பா.ஜ.க.வில் இருந்து  நீக்கப்பட்டார்.

அதன் பிறகு சிறிது  காலம் கழித்து அவர் மீண்டும் பா.ஜ.க.வில்  சேர்த்துக்கொள்ளப்பட்டார் என்பது  குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago