எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், ஜூலை. 27 - அமெரிக்க வாழ் இந்திய பெண்மணிக்கு பெருமை மிக்க தேசிய கவுன்சில் உறுப்பினர் அந்தஸ்தை அதிபர் ஒபாமா வழங்கியுள்ளார். இது போன்ற பொறுப்புகளுக்கு ஆறுக்கும் மேற்பட்டவர்களை நியமித்து பட்டியலை வெளியிட்டுள்ள அதிபர் ஒபாமா, அமெரிக்காவின் முக்கிய நிர்வாக பிரச்சினைகளை எதிர்கொள்ள இவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இவர்களுடன் பல ஆண்டுகள் இணைந்து செயல்பட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். அமெரிக்கவாழ் இந்திய பெண்மணி ராணிராமசாமி தேசிய கவுன்சில் கலைப் பிரிவு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ராகமாலா நாட்டிய நிறுவனத்தின் நிர்வாகியான ராணிராமசாமி, 1978 ம் ஆண்டு முதல் பரத நாட்டியம் பயிற்றுவித்து வருகிறார். வாக்கர் ஆர்ட்ஸ் சென்டர், அமெரிக்கன் கம்போசர்ஸ் போரம், மினியோபொலிஸ் இன்ஸ்டியூட் ஆப் ஆர்ட்ஸ் உள்ளிட்ட அமைப்புகளால் பாராட்டப்பட்டவர் இவர். அமெரிக்க நாட்டிய திருவிழா மும்பை தேசிய நிகழ்த்து கலை மைய நிகழ்வுகளின் போது நிகழ்த்து கலைக்கான கென்னடி மையம், ராணிராமசாமியின் நாட்டியத்தை வெகுவாக பாராட்டியுள்ளது. இவர் 14 மெக்நைட் நிற விருதுகள், புஷ் அறக்கட்டளை நாட்டிய விருது, சர்வதேச கலை மையத்தின் நிதி, 2011 ம் ஆண்டுக்கான மெக்நைட் சிறந்த கலைஞருக்கான விருது உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார். ராணிராமசாமி சென்னை பல்கலைக் கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


