முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலவில் முதல் காலடியை வைத்த நீல் ஆம்ஸ்டிராங் மரணம்

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிள்டன். ஆக. - 27 - நிலாவில் முதல் முதலாக காலடி வைத்த விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்டிராங் நேற்று  தனது 82 வது வயதில்  மரணம் அடைந்தார். கடந்த 1969 ம் ஆண்டு அப்பல்லோ - 11 என்ற விண்கலத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நிலாவுக்கு அனுப்பியது. இந்த விண்கலத்தில்  நிலாவுக்கு சென்ற  2 அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவர் நீல் ஆம்ஸ்டிராங். இவர் நிலாவில்  1969 ம் ஆண்டு ஜூலை 20 ம் தேதி தனது முதல் காலடியை  எடுத்து வைத்து மனித குலத்திற்கே மகத்தான  பெருமையை தேடித்தந்தார். அப்போது அவருக்கு வயது 38. நிலாவில் புழுதி தரையில் காலடி வைத்த பிறகு  ஆம்ஸ்டிராங் கூறுகையில்  இது எனது சிறிய காலடிதான். ஆனால் இது மனித குலத்திற்கு மகத்தான காலடி என்றார். இவருக்கு கடந்த சில வாரங்களாக இருதய நோய் இருந்து வந்தது. இதை அடுத்து அவரது பிறந்த நாளான ஆகஸ்டு  5 ம் தேதிக்கு பிறகு  அவருக்கு  பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. அதன் பிறகு  அவருக்கு இருதய கோளாறுகள் ஏற்பட்டன. இதை அடுத்து  ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார். அவருக்கு  வயது இப்போது 82 . அவர் மரணம் அடைந்த செய்தியை அவரது குடும்பத்தினர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். நீல் ஆம்ஸ்டிராங் 1930 ம் ஆண்டு  ஆகஸ்டு மாதம் 5 ம் தேதி  வாபாகோனிடா  என்ற ஊரில் பிறந்தார்.  இவர் தனது பெற்றோருக்கு  மூத்த பிள்ளையாக பிறந்தார்.இவர் தனது கல்லூரியில் படிக்கும் போது காதலித்த ஜேனட் ஷெரோனை 1956 ல் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு  கேரல் நைட் என்ற பெண்ணை ஆம்ஸ்டிராங் 2 வது திருமணம் செய்து கொண்டார். இதை அடுத்து தனது முதல் மனைவியை  ஆம்ஸ்டிராங் விவாகரத்து செய்து விட்டார்.  சிறு வயது முதலே  விமானத்தில் பறக்கும் ஆர்வம் கொண்ட ஆம்ஸ்டிராங்  பிறகு விமானியாக மாறினார். அதன் பிறகு நாசா விண்வெளி ஆராய்ச்சி  நிலையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு  இவர் நிலாவுக்கு  அனுப்பி வைக்கப்பட்டார். அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்டிராங்குடன் நிலாவுக்கு சென்ற இன்னொரு அமெரிக்க வீரர்  ஆல்ட்ரின் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்