முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் சேனல்களில் பங்கேற்க தடை ஏன்? - மோடி

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

காந்திநகர், ஆக. - 28 - குஜராத்தில் காங்கிரஸ் கட்சியினர் டி.வி 9 நிறுவனத்தின் குஜராத்தி மொழி சேனல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி அண்மையில் கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் டி.வி 9 குஜராத்தி தொலைக்காட்சி நடத்தும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் காங்கிரசார் பங்கேற்கக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்தது. டி.வி 9 தொலைக்காட்சியில் 80 விழுக்காடு பா.ஜ.க அரசியல் நிகழ்வுகளும் குஜராத் அரசின் ஆதரவு நிகழ்ச்சிகளுமே ஒளிபரப்பப்படுகின்றன. 20 விழுக்காடு நிகழ்ச்சிகள்தான் காங்கிரஸ் சார்ந்ததாக இருக்கிறது என்பது அக்கட்சியின் குற்றச்சாட்டு. இத்துடன் காங்கிரஸ் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் டி.வி 9 தொலைக்காட்சியின் செய்தியாளர்கள் எவரும் வரக்கூடாது என்றும் தடை விதித்து விட்டது காங்கிரஸ். அப்படி யாரேனும் வந்தால் டி.வி 9 செய்தியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் காங்கிரஸ் எச்சரித்துள்ளது.

இதனை வன்மையாகக் கண்டித்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல் இது என்று கூறியுள்ளார். குஜராத் மாநிலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையிலும் கூட இந்த விவகாரத்தில் தலையிட்டு காங்கிரஸ் கட்சியிடமிருந்து தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago