முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாங்கண்ணி பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2012      ஆன்மிகம்
Image Unavailable

நாகை, ஆக.- 30 - வேளாங்கண்ணி மாதாபேராலய ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா 29ம்தேதி நேற்று மாலை 6 மணிக்கு கொடியேற்றதுடன் தொடங்கியது. முன்னதாக தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் கொடியை புனிதம் செய்து வைத்தார். பின்னர் கொடி வேளாங்கண்ணி கடைத்தெரு, ஆரிய நாட்டுதெரு, கடற்கரை சாலை வழியாக ஊர்வலகமாக கொண்டு செல்லப்பட்டு வாணவேடிக்கைகள் முழங்க கொடிகம்பத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் பேராலய கலை அரங்கில் மாதா மன்றாட்டு ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நடைபெற்றது. பெருவிழா நிறைவடையும் வரை ஒவ்வொரு நாளும் பேராலயத்தில் காலை 5 மணிக்கு தமிழில் திருப்பலி நடைபெறும். பின்னர் அன்னையின் திருச்சொரூப ஆசீரும், நோயாளிகளை மந்திரித்தலும் நடைபெறும் மாதா குளத்தின் கோயிலில் தினமும் காலை 6 மணிக்கும், காலை 10 மணிக்கும் தமிழில் திருப்பலி நடைபெறும். பேராலய கீழ்க்கோவிலில் காலை 6 மணிக்கு தமிழில் 7.15 மராத்தியில், 8.45க்கு ஆங்கிலத்தில், 10.15க்கு கொங்கணியில் திருப்பலி நடைபெறும். மதியம் 12 மணிக்கு மாதா கொடியேற்றம் நடைபெற உள்ளது. மதியம் 12.15க்கும், மாலை 3 மணிக்கும், தமிழிலும், மாலை 4.15க்கு இந்தியிலும் திருப்பலி நடக்கிறது. மாலை 6.15 மணிக்கு செபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம், மறையுரை, திவ்ய நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு புனித ஆரோக்கிய அன்னை திருத்தேர் பவனி நடைபெற உள்ளது. செப்டம்பர் 1ம் தேதி புனிதப்பாதையில் மாலை 5 மணிக்கு தமிழில் ​ஜெபமாலை நடைபெறும், 7ம்தேதி மாலை 5.15 க்கு பேராலய கலையரங்கில் தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் நடைபெறும். பின்னர் இந்தியாவிற்கான திருத்தந்தையின் தூதர் சால்வத்தோரே மென்னாக்கியோ, தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் ஆகியோர் தலைமையில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்படும். அன்று இரவு 8 மணிக்கு பெரிய தேர்பவனி நடைபெறுகிறது.
புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாளையொட்டி 8ம்தேதி காலை 6 மணிக்கு சால்வத்தோரே மென்னாக்கியோ, ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்படும். மாலை 6 மணிக்கு அன்னையின் கொடி இறக்கப்பட்டு ஆண்டு பெருவிழா நிறைவடையும். பின்னர் மாலை 6.15 க்கு பேராலய கீழ்கோயிலில் மாதா மன்றாட்டு நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படும். விழாவையொட்டி வேளாங்கண்ணி பேராலய கோயில் முழுவதும் ஜொலிக்கும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
பேராலய பெருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் போதிய சுகாதார வசதி, குடிnullர் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் அன்னைத்தும் செய்தும் கொடுக்கப்பட்டுள்ளது. வேளாங்கணிணி திருவிழாவிற்கு வடமாநில மற்றும் தென்மாநிலத்தவரும் அதிக அளவில் வருகை புரிந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்