முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம்கோர்ட்டு புதியதலைமை நீதிபதியாக அல்டமாஸ்கபீர் பதவி ஏற்றுக்கொண்டார்

ஞாயிற்றுக்கிழமை, 30 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி. செப். - 30 - சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த எச்.எஸ். கபாடியாவின் பதவிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அல்டமாஸ் கபீர் இந்தியாவின் 39 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் வருகிற 2013 ம் ஆண்டு ஜூலை மாதம் 18 ம் தேதி வரை இப்பதவியில் நீடிப்பார்.பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், அவரது அமைச்சரவை சகாக்கள், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். பதவியிலிருந்து ஓய்வு பெறும் எஸ். எச் கபாடியாவுக்கு நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள அல்டமாஸ் கபீர் கொல்கத்தாவில் 1948 ம் ஆண்டு ஜூலை 19 ம் தேதி பிறந்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. மற்றும் எல்.எல்.பி. படிப்பை முடித்த கபீர், பிரபல கல்வியாளர் ஹூமாயுன் கபீரின் உறவினரான கபீர் கடந்த 1990 ம் ஆண்டு கல்கத்தா ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கொல்கத்தா ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட கபீர் பின்னர் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிறகு 2005 ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பொறுப்பேற்ற இவர் இப்போது சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார். கொல்கத்தா ஐகோர்ட்டிலும் கொல்கத்தா நகர பிற நீதிமன்றங்களிலும் கணிணிமயமாக்கலுக்கு கபீர்தான் காரணம் என்பது குறிப்பிடதத்கக்து.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்