எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,அக்.6 - கிங்பிஷர் ஏர்லைன்ஸின் கதவடைப்பு இன்னும் ஒரு வாரத்திற்கு அதாவது வரும் 12-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்நாட்டு விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தனியார் விமான போக்குவரத்து கம்பெனியில் சம்பள நிலுவையை உடனே வழங்கக்கோரியும் மற்றும் பல்வேறு சலுகைகளை தரக்கோரியும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான கம்பெனி பொறியாளர்கள் மற்றும் ஒரு பிரிவு விமானிகள் ஆகியோர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கிங்பிஷர் ஏர்லைனஸ் நிர்வாகம் கதவடைப்பு போராட்டத்தை அறிவித்தது. இதனையொட்டி நிர்வாகத்திற்கும் ஊழியர்கள் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 6 மாத சம்பள பாக்கியில் ஒருமாத சம்பள பாக்கியை மட்டும் தருவதாக நிர்வாகத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு ஊழியர்கள் சம்மதிக்கவில்லை. மேலும் ஒரு வார காலத்திற்கு மேலாக கதவடைப்பு நடந்து வருவதால் சில விதிமுறைகளை கிங்பிஷர் ஏர்லைன்ஸ் பின்பற்றுகிறதா என்பதை சரிபார்த்த பின்னர்தான் மீண்டும் இயங்க அனுமதிக்க முடியும். இதற்கு ஒருவார காலமாகும் என்றும் அமைச்சர் அஜீத் சிங் தெரிவித்துள்ளார். ஊழியர்களின் சம்பளம், விதிமுறைகளை மீறிய ஊழியர்கள் விவகாரமும் இதில் அடங்கும் என்றும் அஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


