முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி தலைவரானார் கும்ப்ளே

சனிக்கிழமை, 13 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு, அக். 13- சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கிரிக்கெட் கமிட்டி தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டு காலம் இப்பதவியில் அவர் நீடிப்பார். இந்த கமிட்டி ஆண்டுக்கு இரண்டு முறை கூடும். இக்குழுவின் அடுத்த கூட்டம் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஐ.சி.சி. ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் கும்ப்ளே தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதுவரை இதன் தலைவராக மேற்கிந்திய தீவுகள் முன்னாள் கேப்டன் கிளைவ்லாய்டு இருந்தார். இதே போல் முன்னாள் வீரர்களின் பிரதிநிதியாக கிரிக்கெட் குழுவில் இடம் பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகளின் லியான் பிஷப் மீண்டும் தனது பதவியை தொடர விரும்பவில்லை என்று கூறி விட்டார். இதையடுத்து அவருக்கு பதிலாக சமீபத்தில் ஓய்வு பெற்ற இங்கிலாந்து கேப்டன் ஆண்ட்ரூஸ் டிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஐ.சி.சி. தலைவர் ஆலன் ஐசக் கூறுகையில், அனில் கும்ப்ளே கிரிக்கெட் வீரராக மட்டுமல்ல, நிர்வாகியாகவும் நல்ல அனுபவம் பெற்றவர். சம காலத்தவர்களான கும்ப்ளேவும், டிராசும் இணைந்து லாயிட், பிஷப் ஆகியோர் விட்டு சென்ற பணிகளை சிறப்பாக மேற்கொள்வார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago