எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டர்பன், அக். 19 - சாம்பியன்ஸ் லீக் டி - 20 போட்டியில் டர்பன் நகரில் நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்ட ம் மழையால் கைவிடப்பட்டது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால் போட்டி கைவிடப்பட்டதால் அந்த அணி வெளியேற்றப்பட்டது.
கேப்டன் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏற்கனவே முதல் இரண்டு லீக்கில் தோல்வி அடைந்து புள்ளிகள் பட்டியலில் பின் தங்கி இருந்தது.
சாம்பியன்ஸ் லீக்கில் டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மெட் மைதானத்தில் குரூப் ஏ யைச் சேர்ந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணிகள் மோதின.
முன்னதாக இதில் டாசில் வெற்றி பெ ற்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர் வு செய்தது. பெர்த் அணி தரப்பில் ஷான் மார்ஷ் மற்றும் ஹெர்சிலி கிப்ஸ் இருவரும் ஆட்டத்தை துவக்கினர்.
பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணி 14 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்னை எடுத் து இருந்தது. அப்போது பலத்த மழை பெய்ததால் மைதானம் ஈரப்பதம் ஆனது. இதனால் ஆட்டம் கைவிடப்பட்ட து. இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிக ள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
பெர்த் அணி தரப்பில், ஷான் மார்ஷ் 40 பந்தில் 38 ரன்னை எடுத்து இருந்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அட க்கம். சைமன் கேடிச் 32 பந்தில் 43 ரன் னை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம்.
தவிர, ஆர். மார்ஷ் 5 ரன்னுடன் களத்தி ல் இருந்தார். முன்னதாக கிப்ஸ் கணக் கைத் துவக்காமல் அவுட் ஆனார். கொல்கத்தா அணி சார்பில், பிரட்லீ 1 விக்கெட்டும், காலிஸ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
ஐ.பி.எல் . சாம்பியனான கொல்கத்தா அணி முதல் சுற்றிலேயே ரெளியேற்றப் பட்டது அந்த அணி வீரர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அந்த அணி கடைசி லீக்கில் விளையாட உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


