எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,நவ.16 - காவரியில் மேலும் 4.88 தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக மாநில அரசுக்கு காவிரி கண்காணிப்புக்குழு நேற்று உத்தரவிட்டது. தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை என்று காரணம் கூறி தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடவில்லை. இதனால் காவரி டெல்டா பகுதியில் சுமார் 11 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி பாதித்தது. அதன் பின்னரும் இரண்டாவது சாகுபடிக்கு தண்ணீரை திறந்துவிட முடியாது என்று கர்நாடகம் பிடிவாதம் பிடித்தது. இதனையொட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா காவிரி நிதி ஆணையத்தை உடனடியாக கூட்ட கோரி நடவடிக்கை எடுத்தார். சுப்ரீம்கோர்ட்டிலும் தமிழக அரசு சார்பாக வழக்கு தொடரப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்டும்படி சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. காவரி நதி ஆணையமானது காவரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்தது. இதற்கு கர்நாடக அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. முதலில் காவிரி ஆணைய உத்தரவை நிறைவேற்றுமாறு பணித்தது. இதனையடுத்து அடுத்த முறை திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்துவிடுமாறும் காவிரி கண்காணிப்புக்குழு உத்தரவிட்டது. மேலும் கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கர்நாடகம் திறந்துவிட வேண்டிய 52.5 டி.எம்.சி.தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு, காவிரி கண்காணிப்புக்குழுவில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்த கர்நாடக அரசு,நிலுவை நீரின் அளவை தமிழகம் தவறாகக் கணக்கிட்டுள்ளது. தமிழகத்தின் கோரிக்கை கடந்த மாதம் நடைபெற்ற காவிரி ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிரானது. அதனால் தமிழகம் கோரிய நீரை வழங்க முடியாது என்று கூறியிருந்தது.
இந்தநிலையில் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக முடிவு செய்ய காவிரி கண்காணிப்புக்குழுக்கூட்டம் நேற்று புதுடெல்லியில் உள்ள ஷ்ரம் சக்தி பவனில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை செயலாளரும் குழுவின் தலைவருமான துருவ் விஜய் சிங் தலைமை தாங்கினார். தமிழக தலைமை செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி, கார்நாடக தலைமை செயலாளர் எஸ்.வி.ரங்கநாத், கேரளம், புதுவை ஆகிய மாநிலங்களின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் இன்று முதல் வரும் நவம்பர் 30-ம் தேதி வரை காவிரியில் 4.88 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்திற்கு கண்காணிப்புக்குழு உத்தரவிட்டது. ஆனால் தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவை தண்ணீர் 52.5 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கண்காணிப்புக்குழுக்கூட்டம் வரும் 28-ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது. அப்போது இதுகுறித்து முடிவு செய்யலாம் என்று தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


