முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிகட்டு நடைபெற உள்ள இடங்களில் ஆய்வு

திங்கட்கிழமை, 7 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடங்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அன்சுல்மிஸ்ரா,இ.ஆ.ப., அவர்கள் காளைகளையும், வீரர்களையும் விதிகளுக்குட்பட்டு முறையாக மருத்துவ பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும் என்று கால்நடைத்துறை இணை இயக்குநர் அவர்களுக்கு உத்தரவிட்டார்.  இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது தெரிவித்ததாவது: நீதிமன்ற உத்தரவுப்படி விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட உள்ளது.  இவ்விழாவை சிறப்பாக நடத்துவதற்கு ஜல்லிக்கட்டு விழா குழுவினருக்கு சில வழிமுறைகளும், காவல்துறையினருக்கு சில வழிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் சிறப்பான முறையில் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு  பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம்.  கடந்த முறை காளைகள் கூடும் இடத்தில் பொதுமக்கள் வேடிக்கை பார்ப்பதற்காக கூடியதால் சிறிய சலசலப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.  இதனால் இந்த உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடைபெறுவதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மிக அவசியம். பொதுமக்கள் அனைவரும் சிரமப்படாமல், வீரர்கள் காளைகளை அடக்குவதை கண்டுகளிக்கும் வகையில் சில இடங்களில் எல்.சி.டி திரைகள் பெரிய அளவில் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காட்சிகள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.  கட்டுக்கடங்காத கூட்டம் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் கூடினால் கூட்டத்தை சமாளிப்பதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து காவல்துறையினரிடம் கலந்தாலோசிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  இந்த விழாவை பார்க்க வரும் பார்வையாளர்களிடம் நீதிமன்ற உத்தரவிற்கிணங்க எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.  அனைத்து பார்வையாளர்களும் வந்து இலவசமாக பார்வையிட்டு செல்லலாம் என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர். இந்த ஆய்வில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.வி.கருப்பையா, கூடுதல் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.அருண்சுந்தர்தயாளன்,இ.ஆ.ப., உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன், திரு.குமார்கவுரவ் (ஐ.எப்.எஸ் - பயிற்சி), மதுரை வருவாய் கோட்டாட்சியர் திரு.ஆறுமுகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.ஜெய்சிங்ஞானதுரை, உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திரு.மருதுபாண்டி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் திரு.ராஜசேகரன், இணைஇயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ராதாராணி, இணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.செந்தில்குமார், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சி.செல்வராஜ், சுற்றுலா அலுவலர் திரு.தர்மராஜ்,வாடிப்பட்டி வட்டாட்சியர் திருமதி.காசிசெல்வி உள்ளிட்ட காவல்துறை, சுகாதாரத்துறை, பேரூராட்சிகள் துறை உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago