முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூமியை நெருங்கி வரும் விண்கல்

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

லண்டன், பிப்.13  - வரும் வெள்ளிக்கிழமை ஒரு விண்கல் பூமியை மிக நெருக்கமாகக் கடந்து செல்ல உள்ளது. இது பூமியைத் தாக்கும் அபாயம் இல்லாவிட்டாலும் பூமிக்கு மேலே பறந்து கொண்டிருக்கும் சில செயற்கைக் கோள்களை பதம் பார்க்கும் வாய்ப்புக்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 2012 னுயு14 என்ற இந்த விண்கல் 45.7 விட்டம் கொண்டது. இது முதலில் பூமியின் மீது மோதலாம் என அஞ்சப்பட்டது. ஆனால், அதற்கான வாய்ப்பே இல்லை என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா தெரிவித்துள்ளது. இந்த விண்கல் பூமியை வெறும் 27,681 கி.மீ தூரத்தில் கடந்து செல்லப் போகிறது. இது அண்டவெளியில் அளவுகளே“டு ஒப்பிடுகையில் மிக மிகக் குறுகிய தூரமாகும். இவ்வளவு நெருக்கத்தில் ஒரு விண்கல் பூமியை நெருங்கிச் செல்வதை இதுவரை விஞ்ஞானிகள் பார்த்தும் இல்லை. இது பூமியில் வந்து விழப் போவதில்லை என்றாலும் பூமிக்கு மேலே சுமார் 35,406 கி.மீ உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு நாடுகளில் நூற்றுக்கணக்கான தொலைத் தொடர்பு, வானிலை, உளவு செயற்கைக் கோள்களில் ஏதாவது ஒன்றின் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை பூமியை 27,681 கி.மீ தூரத்தில் கடந்து செல்லப் போகும் இந்த விண்கல்லை உலகின் பல்வேறு வானியல் தொலைநோக்கிகளும், வானில் சுற்றும் ஹப்பிள் தொலைநோக்கியும் கண்காணித்துக் கொண்டுள்ளன. அதே போல இது பூமிக்கு அருகே வந்துவிட்டுப் போவதைக் காண ஆயிரக்கணக்கான விண்வெளி ஆர்வளர்களும் தங்களது புவியியல் தொலைநோக்கிகளுடன் வான்வெளியை நோக்க வருகின்றன. இந்த விண்கல் மணிக்கு 30,000 கி.மீ. வேகத்தில், அதாவது ஒலிவை விட 8 மடங்கு வேகத்தில் பயணிக்கவுள்ளது. இது ஏதாவது ஒரு செயற்கைக் கோளின் மீது மோதினால் என்ன ஆகும் என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago