முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் தி.மு.க. செயற்குழு இன்று கூடுகிறது

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச்.- 25 - சென்னையில் தி.மு.க. தலைமை செயற்குழு அவசர கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.  இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பொதுச்செயலாளர் க.அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.  தலைமை செயற்குழு உறுப்பினர்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 7 முதல் 10 பேர் வரை உள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்பார்கள். இவர்களுடன் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 250 பேர் பங்கேற்பார்கள் என தெரிகிறது.  இலங்கை பிரச்சினையில் தி.மு.க.வின் கோரிக்கையை மத்திய அரசு உதாசீனப் படுத்தியதால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் மத்திய மந்திரி சபையில் தி.மு.க. விலகி உள்ள சூழ்நிலையில் தி.மு.க.வின் அரசியல் நிலைப்பாடு மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி வியூகம் குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago