மாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் 10 உணவுகள் !

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2016      மாணவர் பூமி
badam 2016 11 21

மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடங்கள் மற்றும் சிறுவயதில் நிகழும் சம்பவங்கள் இவை அனைத்தும் பசுமரத்தாணி போல அவர்கள் மனதில் பதியும் என்று சொல்லுவார்கள். ஆனால், தற்போது சிறியவர்கள், குறிப்பாக மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான பிரச்சனைகளில் ஞாபக சக்தி குறைபாடும் ஒன்று.

இதற்கு காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், போதிய சக்தியின்மையாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே இதற்கு காரணம். இதன் காரணமாக, மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறது. எந்த ஒரு முக்கியமான வேலையை செய்ய நினைத்தாலும், அதனை உடனே மறந்து விடும்.

ஞபக சக்தி குறைபாடுகளுக்கு, சரியான உணவுகளை சாப்பிடாததும் இதற்கு ஒரு காரணம். எனவே ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளையை சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவு வகைகளை சரியாக சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு, உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். இந்த கட்டுரையில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பத்து உணவு வகைகள் பற்றி இங்கு காண்போம்.

பால் உணவு பொருள்கள்: பால் உணவு பொருள்களில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உள்ளது. இவை நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மட்டுமல்லாமல் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது.மேலும் வளரும் குழந்தைகளுக்கு பால் உணவு பொருள்கள் நல்ல ஒரு உடல் வளர்ச்சியைத் தருவதோடு, மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கிறது.

தண்ணீர்: மூளையில் 4-ல் 3 பங்கு தண்ணீர் உள்ளது. எனவே தண்ணீர் குறைவானால் மூளையில் செயல்பாடும் குறைந்து, மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறைந்துவிடும். எனவே அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால், மூளையில் வறட்சி ஏற்படாமல், மூளைச் செல்கள் சுறுசுறுப்போடு செயல்படும்.

ஒமேகா-3 உணவுகள்: ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள உணவுகளான முழு கோதுமை தயாரிப்புகள், பழுப்பு அரிசி, ஓட்ஸ், சோயா பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள், முட்டை, பால், தயிர், சீஸ், நட்ஸ், காய்கறி எண்ணெய்கள் முதலியன ஆகும். மேலும் ஆளி விதைகள் மற்றும் மீன் கூட ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவிற்கு நல்ல ஆதாரங்களாக இருக்கின்றன.

வல்லாரை: வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து கொள்ளலாம். இக்கீரையை நிழலில் காயவைத்துப் பொடியாக்கி, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் மாணவர்கள் நல்ல நினைவாற்றலுடன், சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். வல்லாரை கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை மாத்திரைகளை பயன்படுத்தலாம். கேப்ஸ்ய்யூல்கள் பயன்படுத்த வேண்டாம்.

மிளகு, சீரகம்: சமைக்கும் போது மிளகு சீரகம், ஆகியவை கண்டிப்பாக சேர்த்து கொள்ள வேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

முட்டை:  மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. மேலும் இதை அதிகம் உண்பதால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையானது களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கும்.

பாதாம் பருப்பு: தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கி பருப்பை அரைத்து சாப்பிட வேண்டும். இதனால் நினைவாற்றல், அதிகரிப்பதோடு, மூளை நரம்புகள் வலுப்படும். 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ், தாது உப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் இருக்கிறது.

தேன் : தேனில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு கரண்டி தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

பச்சை இலைக் காய்கறிகள் : பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

தானிய வகைகள்: வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும். நமது உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால் நல்லது. மேலும் வைட்டமின் பி அதிகம் இருப்பதால், உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், உடலில் எல்லா பாகங்களும் சுறுசுறுப்பாக இருக்கும்.

மேற்கண்ட உணவுகளை மாணவர்கள் தினந்தோறும் தங்கள் உணவில் சேர்த்து வந்தால் அவர்கள் படிப்பில் மட்டுமல்லாது, நினைவு திறன் சார்ந்த அனைத்திலும் சிறப்பாக செயல்பட உதவும் என்பதில் ஐயமில்லை.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்: