முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட்டார சுகாதார மையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் நேற்று வட்டார சுகாதார மையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் வட்டார சுகாதார மருத்துவர் உமாதேவி தலைமை தாங்கினார்.சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் டி.குமார் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தாமரைச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். முகாமினை உத்திரமேரூர் எம்.எல்.ஏ க.சுந்தர் கலந்துக்கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். முகாமிற்கு சாலவாக்கம் குறும்பிரை, ஆலப்பாக்கம், பொற்பந்தல், எடமச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 997 பேர் சிகிச்சை பெற்றனர். இம்முாகமில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு இருதயநோய், சிறுநீரகநோய், எலும்பு, காது, மூக்கு, தொண்டை, பெண்கள் சிறப்பு பிரிவு, கண் மருத்துவம், பொது மருத்துவம், குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை உட்பட பல்வேறு வகைகளில் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைப்பெற்றவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ்104 பேர் மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள்,செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிகிச்சையளித்தனர். இம்முகாமில் கிராம மக்கள் ஏராளமானோர் பயனடைந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்