முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா கும்பாபிஷேக்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 7500 போலீசார் ஈடுபடவுள்ளனர். அனுமதி சீட்டு வைத்திருப்போர் மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்க ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகாகும்பாபிஷேகம் வரும் 6ந் தேதி காலை 9.05 மணிமுதல் 10.30 மணிக்குள் நடைபெறவுள்ளது. 15ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த விழாவில் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாலை மாவட்ட ஆட்சியரகத்தில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடந்தது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இரா.பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்கள் ரங்கராஜன், ராஜேந்திரன், உதவி காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி பிரியா, கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி,   கோவில் இணை ஆணையர் ஹரிபிரியா, தாசில்தார் சி.பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் ரூ. 7.19 கோடி செலவில் 97 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், இன்னும் ஒருசில பணிகள் விரைவில் முடிக்கப்படும் என கோவில் இணை ஆணையர் தெரிவித்தார். மேலும் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் காண நேரடி ஒளிபரப்புக்கு வசதியாக 25 இடங்களில் எல்இடி அகன்ற திரையமைக்கப்படுவதாகவும் அவர் தெரிவிததார். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு செய்தார். அப்போது கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில் 7500 போலீஸார் ஈடுபடுவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் மற்றும் போலீசாரால் வழங்கப்படும் அனுமதிச்சீட்டு வைத்திருப்போர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிப்பதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அனுமதி சீட்டு இல்லாத பக்தர்கள் அனைவரும் கோவிலுக்கு வெளியே மாடவீதி, வடக்கு மற்றும் தெற்கு, ஒத்தவாடை தெருஆகிய பகுதிகளிலிருந்து கும்பாபிஷேகத்தை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்