முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 1.08 கோடி மதிப்பில் அதிநவீன ஆவின் பாலகங்கள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்ஆணைக்கிணங்க பால்வளத்துறை அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி                        கலெக்டர்சஜ்ஜன்சிங் ரா.சவான்                    மாநிலங்களவை உறுப்பினர்  அ.விஜயக்குமார் ஆகியோர்கள் முன்னிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 1.08 கோடி செலவில் புதிதாக கட்டி முடிக்கபட்ட   பொது கிட்டங்கி அறை, பணியாளர்கள் ஓய்வறை , உயர் மின்னழுத்த மின்மாற்றி மற்றும் அதிநவீன ஆவின் பாலகங்களை  திறந்து வைத்து, பார்வையிட்டார்கள்.

பால்வளத்துறை அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி                        கன்னியாகுமரி கலெக்டர்சஜ்ஜன்சிங் ரா.சவான்    மாநிலங்களவை உறுப்பினர்  அ.விஜயக்குமார் ஆகியோர்கள் முன்னிலையில், நாகர்கோவில், ஆவின் பாலக வளாகத்தில் ரூ. 32 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாதாம் உற்பத்தி பிரிவு மற்றும் பணியாளர்கள் ஓய்வறை கட்டிடங்களையும், ரூ. 15 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பொது கிட்டங்கி அறை, ரூ. 30 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட உயர்மின்னழுத்த மின்மாற்றி, வடசேரி, உழவர் சந்தையில் ரூ. 24 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகத்தையும்,  குழித்துறை, வெட்டுமணி பகுதியில் ரூ. 7 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகத்தையும்  திறந்து வைத்து, பார்வையிட்டார்.  பால்வளத்துறை அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி   பேசும்போது தெரிவித்ததாவது:-

 அம்மா  6-வது முறையாக பதவியேற்றவுடன், ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, முதல் 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டு, அதனை உடனடியாக செயல்படுத்த ஆணையிட்டுள்ளார்கள். அதே போன்று, ஒவ்வொரு துறைகளின் வாயிலாக ஏழை, எளிய மக்கள் பயனடைய செய்யும்வகையில், பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தார்கள். அவ்வழியாக செயல்படும் தமிழக அரசு, இத்திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கிறது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில், அம்மா அவர்களின் நல்லாசியுடன், சின்னம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி, தமிழக அரசு பால்வளத்துறையின் மூலம் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் அதிநவீன ஆவின் பாலகங்கள் திறப்புவிழா இன்று நடைபெற்றது. 

 அம்மா  பால்வளத்துறை மானியக் கோரிக்கையின்போது,                      ஆவின்-ன் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் கருணை ஓய்வ+திய திட்டம் என்ற சிறப்பான திட்டத்தை அறிவித்து, அவர்களது வாழ்வில் ஒளியேற்றி வைத்தார்கள்.

 அம்மா  எந்தவொரு செய்தாலும் அதில் முழு வெற்றி பெறுவார்கள். ஏனென்றால், ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கு எது தேவை என்பதை, நன்றாக அறிந்து கொண்டு, அதற்கேற்ப திட்டங்களை செயல்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக உயர வழிவகை செய்துள்ளார்கள்.  குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு நோட் புத்தகங்கள், சீருடைகள், இலவச பேரூந்து பயணஅட்டை, மடிக்கணினிகள், மிதிவண்டிகள் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம், அவர்களின் கல்வி உயர வழிவகை செய்துள்ளார்கள்.  மேலும், சுகாதாரதுறையின் மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்,  மகப்பேறு நிதியுதவி திட்டம், அம்மா குழந்தைகள் நலபரிசு பெட்டகம் போன்ற திட்டங்களின் மூலம், என்றும் மக்களின் பாதுகாவலனாக விளங்கிய, ஒரே முதலமைச்சர்  அம்மா தான். பெண்களின் கல்வியை உயர்த்துவதற்காக சமூக நலத்துறையின் மூலம், ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த தாலிக்கு 4 கிராம் தங்கம்; திட்டத்தை, மீண்டும் உயர்த்தி 8 கிரமாக வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.  அதுமட்டுமல்லாமல், அனைத்து மக்களும் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் முழுவதுமாக பெற்று பயனடைய செய்கின்றவகையில், அம்மா உப்பு, அம்மா உணவகம், அம்மா மருந்தகம் போன்ற பல்வேறு திட்டங்களை, ஒவ்வொரு துறைகளின் வாயிலாக அறிவித்து, சிறப்பான முறையில் செயல்படுத்தியவர்; அம்மா

 அம்மா  ஜாதி, மதம் என்ற வேறுபாடில்லாமல், இஸ்லாமிய சகோதரர்களுக்கு நோன்பு நேரத்தில், பள்ளி வாசலுக்கு இலவச அரிசி, கிறிஸ்துவர்கள் புனித பயணமான ஜெருசேலம் செல்வதற்கு மானியம் போன்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழக அரசு, அனைத்துத்துறைகளிலும் மிகபெரிய வளர்ச்சியடைந்துள்ளது.  குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், பால்வளத்துறை அம்மா அவர்களின் நல்லாசியுடன், தமிழக அரசு எடுத்த பெரும்முயற்சியினால், அதிக லாபத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.  ஏனென்றால், கறவை மாடு வழங்கும் திட்டத்தின்மூலம், ஏராளமான மக்கள் பயனடைந்துள்ளார்கள்.  ஆகவே ஆவின் பால் என்பது, தாய்ப்பாலுக்கு இணையானது.  இதில், கலப்படம் எதுவுமில்லை.  மிகவும் உண்மையான நம்பிக்கை வாய்ந்த ஒரே நிறுவனம் ஆவின் மட்டும்தான்.  கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆவின் ஒன்றியம் கடந்த 6 ஆண்டு காலமாக, தொடர்ந்து இலாபத்தில் செயல்பட்டு கொண்டு வருகிறது.  குறிப்பாக 2015-16-ம் ஆண்டில்                         ரூ. 2.20 கோடி இலாபம் ஈட்டியுள்ளது. ஒன்றியம் மூலமாக சங்க உறுப்பினர்களின் கால்நடைகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக கால்நடை தீவனம் கிலோ ஒன்றுக்கு மானியமாக ரூ. 4.00 வீதம் மாதம் ஒன்றுக்கு 70 டன் வழங்கப்படுகிறது.  தாது உப்பு கலவை 50 சதவீதம் மானியத்தில் மாதம் ஒன்றுக்கு 1000 கிலோ வழங்கப்பட்டு வருகிறது.  ஒன்றியத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளாக, சங்கங்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு 80 காசுகள் வீதம் நிர்வாக செலவுகளுக்காக கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்படுகிறது.  மேலும் லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.00 வீதம் ஊக்கத்தொகையும் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.   அம்மா  ஆவின் மூலம் பணியாற்றி,  ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு கருணை ஓய்வ+தியம் திட்டத்தினை அறிவித்தார்கள்.  அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 85 பணியாளர்களுக்கு கருணை ஓய்வ+தியமாக ரூ. 2.40 இலட்சம் மாதம் ஒன்றுக்கு வழங்கப்படவுள்ளது.  மேலும் ஆவின் பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ், 52 பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து, பின்னர் இதற்கு முன்பாக, 20 இலட்சம் லிட்டர் பால்உற்பத்தி இருந்தது.  அம்மா அவர்களின் ஆட்சியில் 31 இலட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. மேலும், சென்னையில் வர்த்தா புயலின் போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து, பொதுமக்களுக்கு மிகவும் இடைய+றாக இருந்தது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், ஒரு சிறியளவிலான வாகனம் செல்ல முடியாத இடத்திலும், ஆவின் மூலம் பொதுமக்களுக்கு பால் விற்பனை சிறப்பாக செய்யப்பட்டது.  இதுபோன்ற  பல்வேறு நிலையங்களில் மக்கள் பாதிக்கப்பட்டாலும், என்றும் தமிழக அரசு, மக்களுக்காகவே செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு அடையாளமாக இருக்கும். எனவே, எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில், பொதுமக்களாகிய நீங்கள் அ.இ.அ.தி.மு.க கட்சி வெற்றிபெற உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.        

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவுத்தலைவர் எம். சேவியர் மனோகரன், மாவட்ட பால்வளத்தலைவர்  அசோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பகவதிபெருமாள், வழக்கறிஞர்கள் ஞானசேகரன், பால ஜனாதிபதி, துணை பதிவாளர் (பால்பளம்)  கஸ்தூரிபாய், ஆவின் பொது மேலாளர் சுந்தரமகாலிங்கம், துணை பால் ஆணையாளர்  சண்முக ராஜ்குமார், என்.என்.ஸ்ரீஐயப்பன்,  நாஞ்சில்சந்திரன், ரெஜிஸ்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago