முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில்மீத்திறன் மாணவர்களுக்கு மாநில அளவில் உயர்ந்தபட்ச மதிப்பெண்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: கலெக்டர் கே.விவேகானந்தன், தகவல்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      தர்மபுரி

தருமபுரி:இக்கல்விhண்டில் (2016-2017) தருமபுரி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெறச் செய்யவும், மீத்திறன் மாணவர்களுக்கு தனிப் பயிற்சி அளித்து அவர்கள் மாநில அளவில் உயர்ந்தபட்ச மதிப்பெண்கள் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் மூலம் 12ம் வகுப்பு பயிலும் மீத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 31.01.2017 அன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்குவிப்பு வகுப்பு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஊக்குவிப்பு நிகழ்ச்சி (ஆழவiஎயவழைn ஊடயளள) 07.02.2017 அன்று அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தருமபுரி கூட்ட அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. பாட வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தேர்வு தொடர்பான அறிவுரைகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் பற்றி எடுத்துரைக்க உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் அனைத்து பள்ளிகளில் இருந்தும் மீத்திறன் மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.     மாநில அளவில் நம் மாவட்ட மாணவர்கள் மிகச் சிறந்த இடத்தை பெறும் நோக்கோடு மீத்திறன் மாணவர்களை பொறுப்பான ஆசிரியர் துணையுடன் தவறாமல் அனுப்பி வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்