முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகாடு மீனவ கிராமத்திற்கு பேருந்து வசதி: விஜயக்குமார் எம்.பி. துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி,

 

மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயக்குமார் கன்னியாகுமரி மாவட்டம், பெரியகாடு மீனவ கிராமத்திற்கு முழுநேர பேரூந்து வசதியை, பெரியகாடு சர்ச் முன்பு கொடியசைத்து, துவக்கி வைத்தார். இப்பேரூந்து பெரியகாடு, இராஜாக்கமங்கலம் துறை, ஆடராவிளை, அனந்தநாடார் குடியிருப்பு, ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செட்டிக்குளம் ஜங்ஷன், வேப்பமூடு, டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக வடசேரி பேரூந்துநிலையத்திற்கு வந்து செல்லும்.மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயக்குமார் பேரூந்தை துவக்கி வைத்து தெரிவித்ததாவது:-

 

அம்மா அவர்களின் வழியில் தமிழக அரசு மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதில் முன்னோடியாக திகழ்கிறது. இந்த ஊர்மக்கள் நாகர்கோவில் செல்வதற்கு வசதியாக முழுநேர பேரூந்து வசதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் இன்று இந்த பேரூந்து தொடங்கி வைக்கப்பட்டது. இதனால் பெரியகாடு, இராஜாக்கமங்கலம்துறை, ஆடராவிளை, வைராகுடியிருப்பு, அனந்தநாடார் குடியிருப்பு ஊர்மக்கள் மற்றும் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்தார். இந்த பேரூந்தில் மாநிலங்களவை உறுப்பினர் சிறிது தூரம் பயணம் செய்தார். பின்னர் இராஜாக்கமங்கலம் துறை, வைராகுடியிருப்பு, அனந்தநாடார் குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். மேலும் இந்த பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு வேண்டும் என்று பொதுமக்கள் கூறினார்கள். விரைவில் மின்விளக்கு அமைக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் பங்குதந்தை மரியசெல்வன், வேல்முருகன், நாஞ்சில் சந்திரன், தாணுபிள்ளை, ராஜரெத்தினம், கனகராஜன், செல்வகுமார், பொன் சேகர், ரமேஷ், அனந்தநாடார் குடியிருப்பு போதகர் அருள் டேனியல் தேவதாசன், அரசு போக்குவரத்துகழக மேலாளர் (பனிமனை) பெருமாள், துணை மேலாளர் வேலுதாஸ், ஜெரோலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago