தொழிலாளர் நலவாரியங்களில் சேர சிறப்பு பதிவு முகாம் கோத்தகிரியில் வரும் 16-ந் தேதி நடக்கிறது

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      நீலகிரி

தொழிலாளர்நலவாரியங்களில் புதிய உறுப்பினர் சேர்க்க சிறப்பு பதிவு முகாம் கோத்தகிரியில் வரும் 16 தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

                            17 நல வாரியங்கள்

கட்டுமானம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர், அமைப்புசாரா ஓட்டுநர்கள், சலவை தொழிலாளர்கள்,முடிதிருத்துவோர், தையல் தொழிலாளர், கைவினைத்தொழிலாளர், காலணி தயாரிக்கும் தொழிலாளி, ஓவியர், பொற்கொல்லர், மண்பாண்டத் தொழிலாளர், வீட்டுப்பணியாளர், பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் சலவை தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கென 17 நல வாரியங்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டு தொழிலாளர் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாரியங்களில் தொழிலாளர் பதிவு சேர்க்கை மாவட்ட தொழிலாளர் அலுவலர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மேற்படி நலவாரியங்களில் புதியதாக உறுப்பினர்களை சேர்க்க சிறப்பு பதிவு முகாம் வரும் 16_ந் தேதி  காலை 10 மணிக்கு கோத்தகிரி தோட்ட நிறுவன ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் நடத்தப்பட உள்ளது.

                       18 முதல் 60 வயது வரை

இந்த நலவாரியங்களில் பதிவு செய்யாத தொழிலாளர்கள் பதிவு கோரும் விண்ணப்பத்தினை உரிய படிவத்தில் இம்முகாமில் நேரில் அளித்து வாரியத்தில் பதிவு செய்து வாரிய நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கல். இதற்கு பதிவு கட்டணம் ஏதும் இல்லை. ஆனால் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்கு இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சான்றொப்பமிட்ட குடும்ப அட்டை நகல், அடையாள அட்டை நகல், வயது குறித்த சான்று, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் தொழில் பற்றி சான்றினை உரிய அலுவலரிடம் விண்ணப்பத்தினை பெற்று விண்ணப்பிக்க வேண்டும். அரசின் பிற துறைகளின் கீழ் உள்ள வாரியங்கள், திட்டங்கள் மற்றும் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு பெற்றவர்கள் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்ய இயலாது.

எனவே இந்த அரிய வாய்ப்பை அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: